உலக அளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கோவிட்- 19 கரோனா வைரஸ் ஆயிரக் கணக்கான உயிர்களைப்பறித்ததோடு, லட்சக்கணக்கானவர்களையும் பாதித்துள்ளது. இதன் தாக்கம் தற்போது இந்தியாவிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள சூழலில், இந்த வைரஸ் தாக்கதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்து மருத்துவத்துறையைச் சேர்ந்த பலரும் மக்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
அந்த வகையில் இந்தப் புதிய கரோனா வைரஸிடம் இருந்து நம்மை காத்துக்கொள்ளவும், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளவும் செய்யவேண்டியவை குறித்து சென்னை ஆயுர்வேதா ஃபார்மஸியைச் சேர்ந்த மருத்துவர்கள் பிரசாத் மற்றும் தர்ஷனா திலிப் நம்மிடம் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
அதன்படி உலகம் முழுவதும் பரவிவரும் இந்த கரோனா வைரஸிலிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ள ஆறு முக்கியமான இயற்கை மருத்துவ முன்னெச்சரிக்கை குறிப்புகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
அதன்படி,
1) வெண்நொச்சி, வேம்பு, ஆமணக்கு, தைல இலை, பச்சை ஏலம், கிராம்பு, கற்பூரவள்ளி ஆகியவற்றைப் பயன்படுத்தி தினமும் இரண்டுமுறை ஆவி பிடித்தால் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
2) உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் தினமும் வாய் கொப்பளிப்பது.
3) சுவாசப்பாதையைச் சுத்தப்படுத்த தினமும் 'பிரதிமர்ஷா நஸ்யா' செய்யலாம்.
4) தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது நெய் ஏதாவது ஒன்றினை நாசி மற்றும் வாய் பகுதியில் தினமும் இருமுறை தேய்க்கலாம்.
5) சுக்கு, மிளகு, துளசி இலை, ஏலக்காய், கிராம்பு, சீரகம் ஆகியவற்றுடன் காபி தூள் சேர்த்து டிகாக்ஷன் செய்து அருந்தலாம்.
6) உப்புநீர் மற்றும் தேன் கொண்டு கபத்தை வெளியேற்றலாம்.
மேலும், இந்தச் சூழ்நிலையில், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வண்ணம் அவ்வப்போது சில ஆயுர்வேத மருந்துகளையும் உட்கொள்ளலாம் என மருத்துவர்கள் பிரசாத் மற்றும் தர்ஷனா திலிப் தெரிவிக்கின்றனர்.
அதன்படி,
தசமூல கசாயம், தசமூல கடுத்ரய கசாயம், அமர்தோதரம் கசாயம்,இந்துகந்தம் கசாயம், தாளிசபத்திரி சூரணம், சுதர்சன சூரணம், வாஸரிஷ்டம், கனகாஸவம், குஷ்மந்த ரசாயனம், அகத்திய ரசாயனம் ஆகியவற்றையும் உடல்நலம் காக்க எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், மக்கள் மருத்துவர்களிடம் தனிப்பட்ட ஆலோசனைகள் மற்றும் சோதனைகளை மேற்கொண்டு மருந்துகளை எடுத்துக்கொள்வது சிறந்ததாகப் பரிந்துரைக்கப்படுகிறது.