Skip to main content

செங்கல் செய்யும் ரோபோட்கள்! சூளை செங்கலிலிருந்து காலத்திற்கேற்ப மாறும் மக்கள்... 

Published on 25/07/2018 | Edited on 25/07/2018

மனிதர்களின் அடிப்படை தேவையாகவும் உரிமையாகவும் ஆசையாகவும் இருப்பது 'இருக்கறதுக்கு ஒரு வீடு வேண்டும்' என்பது. அதுலயும் ஒரு சின்ன வீடாவது சொந்தத்தில் கட்டி குடியிருக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு பட்டி, தொட்டிகள் முதல் நகர்ப்புற மக்கள் வரை வந்துவிட்டார்கள். மக்கள் வீடு கட்டுவதற்கான கட்டுமான பொருட்களிலேயே முக்கிய பொருளாக விளங்குவது செங்கல்தான். இந்த செங்கலை சூளைகளிலிருந்து வாங்கி வந்து கட்டிடங்கள் கட்டி வந்த மக்கள் தற்போது படிப்படியாக சூளைக்கல்லை ஓரம்கட்டிவிட்டு காலத்திற்குத் தகுந்தாற்போல் தற்போது மிஷின் கட்டிங் மூலம் உருவாகும் செங்கலை வாங்கி வருகிறார்கள்.

 

bricks



அப்படி தமிழ்நாட்டிலேயே மிஷின் கட்டிங் மூலம் செங்கல் தயாரிப்பது இரண்டு இடங்களில்தானாம். அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் தாடிக்கொம்பிலிருந்து இடைபட்டு செல்லும் சாலையில் பஞ்சம்பட்டி பிரிவில் அமைந்துள்ளதுதான் மிஷின் கட்டிங் மூலம் செங்கல் தயாரிக்கும் செல்வி சேம்பர்ஸ். இந்த செல்வி சேம்பரில் எப்படி மிஷின் கட்டிங் (ரோபாட்) மூலம் செங்கல் தயாரிக்கிறார்கள் என்று அறிய செல்வி சேம்பருக்குள் சென்று ஒரு பார்வை பார்த்தோம். மலைபோல் கொட்டியிருக்கும் வண்டல் மண்ணை (செம்மண்) அங்கங்கே தண்ணீர் ஊற்றி பக்குவப்படுத்தி இருக்கிறார்கள்.  

 

selvi chamber



முதலில் இந்த மண்ணை ஜேசிபி மூலம் எடுத்துச் சென்று மிஷினில் கொட்டுகிறார்கள். இப்படி கொட்டக்கூடிய மண்ணில் கல், தூசிகள் இருந்தால் அதை அருகிலேயே இருக்கும் தொழிலாளர்கள் எடுத்துவிடுகிறார்கள். அதன்பின் அந்த மண் மற்றொரு மிஷினுக்குப் போய் மாவு போல் சுத்தமான மண்ணாகிவிடுகிறது. அதில் கம்ப்ரசர் மூலம் டீசல் ஆயிலும் சரியான அளவில் கொடுக்கப்படுவதன் மூலம் அந்த மண் பிளேட்டாக (தட்டையாக) உருவாகி மற்றொரு மிஷினுக்கு தள்ளப்படுகிறது. அப்படி தள்ளப்படுவதை ரோபோட் மிஷின் செங்கலாக மூன்று இஞ்ச் அகலம், நான்கு இஞ்ச் உயரம், ஒன்பது இஞ்ச் நீளத்தில் மூன்று கிலோ நானூறு கிராம் எடைக்கு கட் பண்ணி விடுகிறது.

 

selvi chamber1



அப்படி வரக்கூடிய செங்கலை அப்படியே அந்த மிஷின் எடுத்து போர்லெக் வண்டியில் வைத்து விடுகிறது. இப்படி வண்டியில் ஏற்றக்கூடிய செங்கலை சேம்பரில் உள்ள செட்டில் வரிசையாக வைத்துவிடுகிறார்கள். இப்படி வைக்கக்கூடிய செங்கல் 27 நாட்களுக்கு நிழலிலேயே இருக்கிறது. அதன்பின் மூன்று நாட்கள் வெயிலில் வைத்த பின் அந்தக் கல்லை அந்த போர்லெக் வண்டியின் மூலமாகக்  கொண்டு சென்று சூளையில் அடித்து வேகவைத்தபின் அப்படியே செங்கலை வீடு கட்டுவதற்கும், தொழிற்சாலைகள் மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கும் விற்பனை செய்து வருகிறார்கள்.

 

 


இதுபற்றி  செல்வி சேம்பர்ஸ் உரிமையாளரும், தொழிலதிபருமான டாக்டர் லயன் ரெத்தினத்திடம் கேட்டபோது,

"காலங்கள் மாறும்போது மக்களும் அதற்கு தகுந்தாற்போல்தான் மாறி வருகிறார்கள். அதனால்தான் நாங்களும் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக மிஷின் கட்டிங் மூலம் செங்கல் தயாரித்து வருகிறோம். இப்படி தயாரிக்கக்கூடிய செங்கல் கம்ப்யூட்டர் மூலம் கட் செய்யப்படுவதால் அளவும் சரியா இருக்கும். அதுபோல் தரமாகவும் கொடுத்து வருகிறோம். சூளை செங்கலை விட எங்க செங்கல் 50 பைசா கூடுதலாக இருந்தாலும் அப்படிப்பட்ட செங்கல் ஆயிரம் வாங்க வேண்டிய இடத்தில் எங்கள் செங்கலை 870 வாங்கினாலே போதும், அது ஆயிரம் கல்லுக்கு சமம். அதோடு அளவும் சரியாகவும், கனம் கூடதலாகவும் இருப்பதால் வாங்குபவர்களுக்கு திருப்தியாக இருக்கிறது. அரசு விதிமுறைகளின்படி ஒரு மீட்டர் உயரத்திலிருந்து கல் கீழே போட்டாலும் உடையக்கூடாது. அதுபோல்தான் எங்கள் செல்வி சேம்பர்ஸ் கல்லும் உடையாது. அந்த அளவுக்கு அரசு விதிமுறைகளின்படி தயாரித்து வருகிறோம். அதுபோல் எங்கள் செங்கலில் மட்டுமே மூன்று பக்கமும் டைமண்ட் வடிவத்தில் டிசைன் போட்டு இருப்பதால் கட்டிடம் கட்டும்போது ஒவ்வொரு செங்கலுக்கு நடுவில் சிமிண்ட் பூசும்போது அந்த செங்கலில் உள்ள டிசைன் கோடுகள் சிமண்ட்க்கு உள்ளே போய் வலுவான பிடிமானத்தையும் கட்டிடங்களுக்கு கொடுக்கிறது. 

  rathinam

 

அதுபோல் மற்ற சேம்பர்களைப்போல நாங்கள் சூலையில் விறகு பயன்படுத்துவது இல்லை. நிலக்கரியும், முந்திரி கொட்டை துகள்களும் மட்டுமே பயன்படுத்துவதால் கல் நல்லமுறையில் வெந்து விடுகிறது. இப்படிப்பட்ட கல் தரமாகவம், உறுதியாகவும் இருப்பதால்தான் தமிழ்நாட்டில் திருச்சி, சென்னை, தஞ்சாவூர், கரூர், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, மதுரை, கோவை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் இருந்தும் மககள் வீடுகள் கட்டுவதற்காகவும், அதுபோல் கடைகள், தொழிற்சாலைகள் கட்டுபவதற்கும் எங்களிடம் வாங்கிச் செல்கிறார்கள். அதுபோல் தமிழகம் மட்டுமல்ல கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட சில மாநிலங்களுக்கும் எங்கள் செங்கல் விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் கேரளாவிற்கு வாங்கிச் செல்லும் மக்கள் கட்டிடங்களுக்கு முழுமையாக சிமண்ட் பூசாமல் ஒவ்வொரு செங்கலுக்கும் போலீஸ் ஸ்டேசனில் இருப்பதுபோல் பார்டர் கட்டி கட்டிடங்கள் கட்டி வருவதால் அது பார்க்க கல் கட்டிடம் போல் அழகாக இருக்கிறது. அதனால் கேரளா மக்களும் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். அதோடு எங்களை செல் (9842993313) மூலம் மக்கள் தொடர்பு கொண்டாலே போதும், தமிழ்நாடு உள்பட மற்ற மாநிலங்களுக்கும் டோர் டெலிவரி கொண்டு சென்று கொடுக்கிறோம். மக்களும் தற்போது சூளைக் கல்லை விட இந்த மிஷின் கட்டிங் செங்கலைத்தான் அதிகம் வாங்கி வருகிறார்கள். அந்த அளவுக்கு தரமாகவும், உறுதித்தன்மையோடும், கொடுத்து வருகிறோம்" என்று கூறினார்.

 

selvi chamber3



இதுபற்றி இஞ்சினியர் துளசியிடம் கேட்டபோது,

"இப்பொழுதெல்லாம் மக்கள் விருப்பப்படிதான் கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டிய நிலையில் இஞ்சினியர்கள் இருக்கிறோம். அந்த அளவுக்கு மக்களுக்கு தகவல்கள் தெரியும். அதனால் செங்கல் முதல் கம்பி மணல் வரை எங்கு வாங்க வேண்டும் என அவர்களே கூறிவிடுகிறார்கள். அதில் செங்கலைத்தான் மெயினாகக் கூறுகிறார்கள். சூளைக்கல் சரிவர தயாரிப்பதும் இல்லை. அதனால் இந்த செல்வி சேம்பர் மிஷின் கடடிங் செங்கலைத்தான் வாங்கச் சொல்கிறார்கள். இங்கு உடை கல்லும் வருவதில்லை. கட்டிடமும் மற்ற செங்கல் எழுப்பி கட்டுவதை விட இந்த செங்கலில் கட்டுவதின் மூலம் கட்டிடமும் பலமாக இருக்கிறது. அதோடு பூச்சுக்கு அதிகம் சிமெண்ட் தேவைப்படுவதில்லை. கொத்தனார்களுக்கு வேலையும் எளிதாக இருக்கிறது. மற்ற கல்போல் இதை பூச்சுக்கரண்டியால் உடைக்க முடியாது. சுத்தியலை வைத்துத்தான் உடைக்க முடியும். அந்த அளவுக்கு ஸ்ட்ராங்காக இருக்கிறது. இதற்கிருக்கும் டிமாண்டினால் சில சமயம் செங்கல் கிடைக்காமல் போவதால் முன்கூட்டியே ஆர்டர் கொடுத்தும் வாங்கி வருகிறோம்" என்று கூறினார்.

 

 


இதைப் பார்க்கும்போது தெரிகிறது... உலகை ஆக்ரமித்து வரும் 'ஆட்டோமேஷன்' எனப்படும் தானியங்கி செயல்முறை, செங்கல் வரை வந்துவிட்டது. மக்களும் விளைவு சிறப்பாக இருப்பதால் தங்கள் வீடுகள் காலத்திற்கும் நிலைத்து நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் மிஷின் கட்டிங் செங்கலுக்கு மாறி வருகிறார்கள். மாற்றம் ஒன்றுதானே மாறாதது... அது நல்லதை நோக்கிய மாற்றமென்றால் ஏற்றுக் கொள்ளலாம். 

 

 

 

Next Story

கட்டுமான பணியின் போது மண்சரிவு; 6 பேர் பலியான சோகம்

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
Landslides during construction Tragedy that 6 people incident

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள காந்திநகரில் பிஜ்லான் என்பவர் வீடு ஒன்றை கட்டி வருகிறார். இதற்காக 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த வீட்டிற்கான கட்டுமான பணியின் போது வீட்டின் பக்கவாட்டு பகுதியில் மண்ணை வெட்டி எடுத்தபோது 30 ஆண்டுகள் பழமையான கழிவறை இடிந்து விழுந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த மண் சரிவில் 8 பேர் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்து. இந்நிலையில் மண் சரிவில் சிக்கிய 8 பேரில் 6 பெண்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுமான பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

‘ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்’ - சென்னை போக்குவரத்து காவல்துறை தகவல்

Published on 31/12/2023 | Edited on 31/12/2023
'Traffic change for one year' - Chennai Traffic Police information

சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் புளியந்தோப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மாநகராட்சியும், ரயில்வே துறையும் இணைந்து புளியந்தோப்பு டாக்டர். அம்பேத்கர் கல்லூரி சாலையில் மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இப்பணிக்காக போக்குவரத்து மாற்றங்கள் முன்மொழியப்பட்டு நாளை மறுநாள் (02.01.2024) முதல் ஓராண்டுக்கு செயல்படுத்தப்படும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி பெரம்பூர் மற்றும் வியாசர்பாடியில் இருந்து டாக்டர். அம்பேத்கர் கல்லூரி சாலை, கணேசபுரம் இரயில்வே சுரங்கப்பாதை வழியாக புரசைவாக்கம் வரும் வாகனங்கள் ஒருவழிப் பாதையாக செயல்படுத்தப்படும்.

புரசைவாக்கம், டவுட்டனில் இருந்து பெரம்பூர், வியாசர்பாடி, மாதவரம் வழியாக டாக்டர்.அம்பேத்கர் கல்லூரி சாலையில் கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக வரும் வாகனங்கள் டாக்டர்.அம்பேத்கர் கல்லூரி சாலை, ஸ்டீபன்சன் சாலை, பெரம்பூர் ஹைரோடு தெற்கு, முரசொலி மாறன் மேம்பாலம், பெரம்பூர் ரயில் நிலையம் சந்திப்பு வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.