the atkins diet tips

அட்கின்ஸ் டயட் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா விரிவாக விளக்குகிறார்.

Advertisment

டயட் உலகின் பிதாமகர் என்று அழைக்கப்படுபவர் அட்கின்ஸ். அவர் ஒரு மருத்துவர். திடீரென்று அவருக்கு உடல் பருமன் ஏற்பட்டது. அப்போது அவர் உருவாக்கியது தான் அட்கின்ஸ் டயட் முறை. டயட் குறித்து அவர் ஏழு புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் இறந்த பிறகு அட்கின்ஸ் டயட் மூலம் மாரடைப்பு ஏற்படும் என்கிற புரளி பரவியதால் பலரும் அதைப் பின்பற்றுவதை நிறுத்தினர். ஆனால் நல்ல ஒரு டயட் முறையையே அவர் உருவாக்கினார் என்பதுதான் உண்மை.

Advertisment

அட்கின்ஸ் டயட் முறையில் 20, 40, 100 என்று மூன்று வகைகள் உள்ளன. 20 கிராம், 40 கிராம், 100 கிராம் என்கின்ற அளவில் கார்போஹைட்ரேட்டை நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்வது தான் அது. இதில் இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றை நாம் எடுத்துக்கொள்ளலாம். அட்கின்ஸ் 20 தான் கீட்டோ முறை என்றும் அழைக்கப்படுகிறது. அட்கின்ஸ் 40 என்பது ஓரளவுக்கு பாதுகாப்பான உணவு முறை என்று சொல்லலாம். இதுதான் பேலியோ என்று அழைக்கப்படுகிறது. அட்கின்ஸ் 100 முறையில் உருளைக்கிழங்கு போன்றவற்றைக் கூட நாம் சேர்த்துக்கொள்ளலாம்.

அட்கின்ஸ் 20 மற்றும் 40 ஆகிய முறைகள் உடல் எடையைக் குறைப்பதற்கு பயன்படுகின்றன. அட்கின்ஸ் 100 என்கிற முறை உடல் எடையை அப்படியே வைத்துக்கொள்வதற்கு தான் பயன்படுகிறது. அந்தக் காலத்திலேயே இதுபோன்ற உணவுமுறையை அறிமுகப்படுத்திய பிதாமகரை நாம் என்றும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இது ஓரளவுக்கு ஆரோக்கியமான உணவு முறைதான் என்றாலும் இதிலும் சில சவால்கள் இருக்கின்றன.

இந்த உணவு முறையில் அதிகமாக அசைவமும் கொஞ்சம் காய்கறியும் தான் சாப்பிட முடியும் என்பது தான் இதில் இருக்கும் சவால். நம்முடைய ஆரோக்கியத்திற்காக நிச்சயம் நாம் அதை ஏற்றுக்கொள்ளலாம். மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் இது போன்ற டயட் முறைகளை நிச்சயம் நாம் பின்பற்றக் கூடாது. இதைச் செய்வதற்கு முன்பு நிச்சயம் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மிக கவனமாக சாப்பிட வேண்டும்.