Advertisment

அடல் பிஹாரி வாஜ்பாய் சாதனை!

முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் , இவர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் பிரதமராக 1996-இல் முதன் முறையாகப் பதவி ஏற்றவர் வாஜ்பாய். 1998-இல் இரண்டாவது, 1999-இல் மூன்றாவது முறையாகவும் பதவி ஏற்ற போது அவரது ஆட்சியில் பல முக்கிய நிகழ்வுகளும், சாதனைகளும் நடைபெற்றன.

Advertisment

vajpayee

பொக்ரான் அணு சோதனை

வாஜ்பாய் ஆட்சியின் முதல் சாதனையாக மே 1998-இல் இந்தியா நடத்திய பொக்ரான் அணு சோதனை கருதப்படுகிறது. இது வெற்றிகரமாக நடத்தப்பட்ட பின் இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையில் முன்னேற்றம் ஏற்பட்டது. டெல்லி - லாகூர் பேருந்து .

காஷ்மீர் பிரச்சினையை முடிக்க வேண்டி வாஜ்பாய் பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்த முயன்றார். டெல்லி-லாகூருக்கு இடையே 1999-இல் பேருந்து போக்குவரத்தைத் தொடங்கினார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="1282094959"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கார்கில் போர்

அதன் பிறகு தீவிரவாதிகளுடன் சீருடை அணியாத பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கார்கிலில் ஊடுருவியதால் இருநாடுகளின் உறவில் மீண்டும் பிளவு ஏற்பட்டது. இதை சமாளிக்க 1999-இல் "ஆப்ரேஷன் விஜய்' எனும் போர் நடவடிக்கை எடுத்து அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.

vajpayee

பயணிகளுடன் விமானக் கடத்தல்

1999-இல் நேபாளின் காட்மண்டுவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஐசி 814 ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் கடத்தப்பட்டது. இதைச் செய்த தீவிரவாதிகள் விமானத்தை ஆப்கானிஸ்தானின் காந்தஹாரில் இறக்கினர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அரசால் பயணிகள் மீட்கப்பட்டனர். இதற்கு ஈடாக காஷ்மீரின் சிறையில் இருந்த தீவிரவாதியான மசூத் அசார் விடுதலை செய்யப்பட்டார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="1282094959"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மூன்று புதிய மாநிலங்கள்

2000-ஆம் ஆண்டில் வாஜ்பாய் ஆட்சியில் உத்தராகண்ட், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் என மூன்று புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இவை முறையே உ.பி., ம.பி. மற்றும் பிஹாரில் இருந்து பிரித்து அமைக்கப்பட்டன. இதனால், இந்திய மாநிலங்களின் எண்ணிக்கை 25-ல் இருந்து 28 என உயர்ந்தது.

முஷ்ரப்புடன் பேச்சுவார்த்தை

பாகிஸ்தானுடன் நிலவிய பதட்டத்தைத் தணிக்கும் பொருட்டு மீண்டும் நல்லுறவை ஏற்படுத்த வாஜ்பாய் முயன்றார். அந்நாட்டின் அதிபர் பர்வேஸ் முஷ்ரப்புடன் ஜூலை 2001-இல் ஆக்ராவில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பல்வேறு முறை முஷ்ரப்புடன் ஒருவராக வாஜ்பாய் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியில் ஒப்பந்தம் ஏற்படாமல் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

நாடாளுமன்றத் தாக்குதல்

டெல்லியின் நாடாளுமன்றம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் டிசம்பர் 13, 2001-இல் தாக்குதல் நடத்தினர். இதில் சில மத்திய பாதுகாப்பு வீரர்களும் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின் இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல் உருவானது. இதற்காக இந்திய ராணுவப்படைகள் குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் காஷ்மீர் ஆகிய எல்லைப்பகுதிகளில் அமர்த்தப் பட்டிருந்தனர். இந்த நிலை தொடர்ந்து சுமார் இரு வருடங்கள் நீடித்தன.

vajpayee

காலுசோக் தாக்குதல்

இதை அடுத்து மீண்டும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் காலுசோக் எனும் இடத்தில் 3 தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப் பட்டது. இமாச்சலப் பிரதேசப் பேருந்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு அருகிலுள்ள ராணுவக் குடியிருப்பில் புகுந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், குழந்தை, சிறுவர் மற்றும் பெண்கள் உட்பட 23 பேர் பலியாகினர். இதன் பிறகு மீண்டும் இருநாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல் உருவாகி எல்லைகளில் பதட்டம் நீடித்தது.

குஜராத் கலவரம்

2002-இல் வாஜ்பாய் ஆட்சியில் குஜராத் மாநிலத்தில் மதக்கலவரம் ஏற்பட்டது. இதில் போதுமான தடுப்பு நடவடிக்கை செய்யப்படவில்லை என வாஜ்பாய் அரசு மீது புகார் எழுந்தது. இதன் சில வருடங்களுக்குப் பின் பேசிய வாஜ்பாய் குஜராத் கலவரத்தில் தவறு நிகழ்ந்ததாக ஒப்புக் கொண்டார்

Atal Bihari Vajpayee politics prime minister
இதையும் படியுங்கள்
Subscribe