Skip to main content

இந்த விஷயத்துக்கு ஆப்பிள் சரிப்பட்டு வராது...?

Published on 01/11/2018 | Edited on 01/11/2018

ஆப்பிள் ஐ - ஃபோன் எப்போதுமே தனி அங்கீகாரத்தைக்கொண்டது. ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வின் மூலம் அதன் மேல் ஒரு சிறிய சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் சிக்காகோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ கருவியை பொருத்துவதற்காக  சென்றிருக்கிறார்கள். அப்போது உள்ளே சென்றவர்களின் ஆப்பிள் ஐ - ஃபோன், ஆப்பிள் வாட்ச் மற்றும் 40-க்கும் மேற்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் மொத்தமாக செயலிழந்துள்ளது. இவ்வாறு நடப்பதற்கு காரணம் என்னவென்று ஆராயிந்து பார்த்தபோது, சுமார் 120 லிட்டர் ஹீலியம் வாயு ஐந்து மணி நேரமாக ஐ - ஃபோன் மற்றும் அதன் சாதனங்களுக்குள் சென்றதே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ipho

 

 

இந்த சம்பவம் நடந்து முடிந்த பிறகு அனைத்து ஆப்பிள் ஃபோன்களுக்கும் இந்தப் பாதிப்பு இருக்கிறதா என்று ஆராய்ந்திருக்கிறார்கள். அதில் ஐ - ஃபோன் 6 மற்றும் அதற்கு அடுத்த மாடல்களில் மட்டும்தான் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. அதேசமயம் இந்தப் பிரச்சனை ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கு எந்த வகையான பிரச்சனையும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

 

Next Story

 எலான் மஸ்க் போட்ட ட்வீட்; உலகளவில் டிரண்டான தமிழ்பட போஸ்டர்!

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
Tamil movie poster trending all over the world Tweet by Elon Musk

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. பெரும்பாலான துறைகளில் தற்போது செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது நமது வேலைகளைச் சுலபமாகவும் திறம்படவும் செய்து முடிக்கிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஓபன் ஏ.ஐ’ என்ற நிறுவனம் ‘சாட் ஜிபிடி’ என்ற செயற்கை நுண்ணறிவு, பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயற்கை நுண்ணறிவு வரவால், தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மனிதர்கள் தொழில்நுட்பத்தில் செய்யக்கூடிய வேலைகளை, செயற்கை நுண்ணறிவின் மூலம் மிகவும் எளிதாக செய்ய முடியும். மேலும், இது கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுதும் திறன் படைத்தது என்பதுடன் மனிதனை போன்று கணினி குறியீடுகளையும் இதனால் எழுத முடியும். 

அதே வேளையில், இந்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, நகைச்சுவை கேளிக்கைக்காக அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் ஆகியோர்களை கிண்டல் செய்யும் வகையில் மீம்ஸ்கள், போட்டோக்கள், வீடியோக்கள் போன்றவற்றை இணையவாசிகள் சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  இந்த ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் கணினி உள்ளிட்ட இயந்திரங்களுக்கு மனிதர்களைப் போன்ற சிந்தனைகளைக் கொடுக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். 

இதனிடையே, மேக்புக், ஐபோன், ஐபாட் உள்ளிட்ட சாதனங்களில் ‘ஓபன் ஏ.ஐ’ டூல்களை இனி பயன்படுத்தலாம் என ஆப்பிள் சி.இ.ஓ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதனை கண்டித்து ரீட்வீட் செய்த டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் - எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க், ஐபோன், ஆப்பிள், டேட்டா ஆகியவற்றை மையமாக வைத்து உருவாக்கிய மீம்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார்.  

கடந்த 2017ஆம் ஆண்டு முஜிபூர் ரஹ்மான் இயக்கத்தில் துரை சுதாகர் மற்றும் டோனா ரொசாலியோ ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படம் ‘தப்பாட்டம்’. இந்த படத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பல முறை மீம்ஸ்களாக பரவியிருக்கிறது. தற்போது உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தப்பாட்டம் படத்தின் புகைப்படத்தின் பகிர்ந்ததால் இது உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது. 

Next Story

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டதா? - விளக்கமளித்த ஆப்பிள் நிறுவனம்

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

Cell phones of opposition MPs hacked?; Explained by Apple

 

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் விதமாக பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட கட்சியினர் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். அதில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கி தேர்தல் பணியில் ஈடுபட்டு தங்களுக்கான ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். அதில் அடுத்த மாதம் தெலுங்கானா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, அரசாங்கம் தனது செல்போனை ஹேக் செய்ய முயற்சிப்பதாக மின்னஞ்சல் வந்துள்ளதாக இன்று (31-10-23) காலை தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “எனது தொலைப்பேசி மற்றும் மின்னஞ்சலை அரசாங்கம் ஹேக் செய்ய முயற்சிப்பதாக ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து எனக்கு எச்சரிக்கை மின்னஞ்சல் வந்துள்ளது. அதானி மற்றும் பி.எம்.ஓ. நபர்களின் பயத்தை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, எனக்கு மற்றும் இந்தியா கூட்டணியின் மூன்று தலைவர்களுக்கும் இதுபோன்ற எச்சரிக்கை வந்துள்ளது” என்று தெரிவித்தார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

 

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா(உத்தவ் தாக்கரே) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி எம்.பி. ராகுல் சத்தா, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா உள்ளிட்டோரின் கைப்பேசிகளுக்கு, ’உங்கள் ஆப்பிள் கைப்பேசி அரசு உதவிபெறும் அமைப்பால் தாக்குதல் நடத்தக்கூடும். அவ்வாறு உங்கள் கைப்பேசி தாக்குதலுக்கு உள்ளானால், கைப்பேசியில் உள்ள முக்கிய தரவுகள் திருடப்படலாம். 

 

உங்கள் கைப்பேசியின் கேமரா மற்றும் மைக்ரோபோன்களைக் கூட அவர்களால் அணுக முடியும்’ என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. மேலும், இதேபோன்ற செய்தி மின்னஞ்சல் மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செய்தியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சசி தரூர், மொய்த்ரா உள்ளிட்ட தலைவர்கள் மத்திய அரசைக் கண்டித்து பதிவிட்டுள்ளனர். மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். 

 

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களது செல்போனை அரசாங்கம் ஹேக் செய்ய முயற்சிப்பதாகக் கூறப்படும் குறுந்தகவல் குறித்து ஆப்பிள் நிறுவனம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கிட்டத்தட்ட 150 நாடுகளில் உள்ள தனி நபர்களின் செல்போன்களுக்கு அச்சுறுத்தல் அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆப்பிள் அச்சுறுத்தல் அறிவிப்புகள் தவறான எச்சரிக்கையாக இருக்கலாம். அல்லது, சில தாக்குதல்கள் கண்டறியப்படாமல் இருக்கலாம். அச்சுறுத்தல் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு என்ன காரணம் என்பதை பற்றிய தகவலை எங்களால் வழங்க முடியவில்லை. ஏனென்றால் எதிர்காலத்தில் இதுபோன்று தாக்குதல் நடத்துபவர்களின் நடத்தையை மாற்றி அமைக்க உதவும்.” என்று தெரிவித்துள்ளது.