Skip to main content

பதட்டத்தால் வரும் பாதிப்புக்களும், தீர்வுகளும்!

Published on 14/03/2020 | Edited on 14/03/2020

பதறாத காரியம் சிதறாது.

பதறும் செயல்கள் சிதறும்.

பதட்டம் ஒரு அவசரத்தை உருவாக்கி நிதானத்தை குறைப்பதால் பல காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியாமல் ''துவண்டுபோன முகத்துடன் பின்வாங்கி மூலையில் அமரும் நிலைக்கு'' தள்ளப்படுவோம். புதிய முயற்சிகள் அதிக எதிர்பார்ப்பு இறுக்கமான சூழல் மாறுபட்ட வேகம் இவற்றின் கலவையே பதட்ட உணர்வு. இந்த உணர்வு சில நிமிடங்களில் விலகி விட்டால் அது நல்லது. தொடர்ந்தால் சிகிச்சை அவசியம்.
 

hgf



வியர்வை கொட்டுதல்  மெல்லிய தலைவலி  கண்களில் கலக்கம் எரிச்சல் சுவாச மாற்றம் மூக்கு புடைத்தல் உதடுகள் காய்ந்து நாக்கு உலர்தல் கழுத்து தோள்பட்டை சதைகள் இழுப்பு இதயப்படபடப்பு, உள்ளங்கையில் வியர்வை, மெல்லிய நடுக்கம், நகம் கடித்தல், வயிற்றில் பந்து உருளுவது போன்ற உணர்வு, கண்களில் மின்னல் அடிக்கும் உணர்வு.  மருத்துவர்கள் இதை இருவகைப் படுத்துகின்றனர்.

1 .ஒரு நிகழ்வின்போது ஏற்படும் பதட்டம் --- திடீர் விபத்து, துக்கம், அதிர்ச்சி.

நம் நல விரும்பிகளோடு மட்டுமே பழக வேண்டும். மனதில் உள்ள குறைகளை ஒளிவு மறைவு இல்லாமல் கள்ளங்கபடமற்ற மனிதர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் .யோகா, தியானம், மனஅமைதி. 

2. பதட்டம்  முழு குணமாகவே இருத்தல்... மெல்லிய மன பாதிப்புகள், மரபியல் நரம்புத் தளர்ச்சி.

நரம்பியல் மருத்துவத்தில் இதற்கு நல்ல தீர்வுகள் உண்டு. முறையாக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். உடலை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகள். மனதை வலுப்படுத்த நல்ல துணை அவசியம்.

பதட்டம் நம் வாழ்வின் வெற்றியை பாதிக்கும் என்பதால் அதை உடனடியாக சரி செய்யும் முயற்சியில் இறங்க வேண்டும். சிக்மண்ட் பிராய்ட்... போன்ற சில உளவியல்சார் மேதைகள் ''நெருங்கிய காதலும் ஆழமான காமமும் இதற்கு அருமருந்து'' என உரைத்துள்ளதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.