Skip to main content

வயாகரா... 20 ஆண்டுகள்! சுகத்தைத் தந்து உயிரைப் பறித்த கதை #2

கடைகளில் இருக்கும் பலூனை பார்த்திருப்பீர்கள். சாதாரண நிலையில் சுருங்கி இருக்கும். அதனை ஊதி இறுக்கி பிடித்து கொண்டால் பலூன் பெரிதாகிவிடும். இப்போது என்ன நடந்தது. அழுத்தப்பட்ட காற்று பலூனிற்குள் சென்றதால் பலூன் பெரிதானது. காற்று வெளியேற்றிவிட்டால் பலூன் பழையநிலையில் சுருங்கிவிடும். அழுத்தப்பட்ட காற்று பலூனுக்கு விறைப்பை தருகின்றது என்றால் அழுத்தப்பட்ட இரத்தம் ஆண் புணர் உறுப்புக்கு விரைப்பை தருகிறது. ஆணுறுப்பில் கார்பஸ் காவேர்னோசா என்ற பஞ்சு போன்ற இரண்டு புணல்கள் உள்ளன. அவற்றில் அழுத்தப்பட்ட இரத்தம் பாய்வதனால் விரைப்பு ஏற்படுகிறது. அந்த பகுதியில் அழுத்தப்பட்ட இரத்தம் உடனே பாய்வது மட்டும் சாதாரணமாக நடந்துவிடுமா. அதற்கு சில கெமிஸ்ட்ரி உடலில் நடக்க வேண்டும்.

 

viagra2மனித உடலில் மூளை தான் அனைத்தையும் கட்டுப்படுத்தும் தலைவன். எந்த பகுதிக்கு எவ்வளவு இரத்தத்தை செலுத்த வேண்டும் என்பதை மூளையே முடிவு செய்கிறது. இப்போது நீங்கள் ஓடுகிறீர்கள் என்றால் வயிற்று பகுதிக்கு செல்ல வேண்டிய இரத்தத்தை குறைத்து விட்டு, கால்களுக்கான இரத்தத்தை அதிகப்படுத்தும். நன்றாக சாப்பிட்டு விட்டு உட்கார்ந்திருந்தால் கை கால்களுக்கு செலுத்த வேண்டிய இரத்தத்தை குறைத்துவிட்டு வயிற்றுக்கு அதிக இரத்தத்தை செலுத்த செய்யும் செரிமானத்திற்காக. உடலில் இருக்கும் இரத்த நாளங்களை மூடி திறப்பதன் மூலம் இந்த இரத்த ஓட்டம் நடக்கிறது.

 

 


இப்போது ஏதோ ஒரு விதத்தில் பாலின உணர்வு ஏற்படுகிறது. அப்போது மூளை ஆணுறுப்பு பகுதியில் இருக்கும் நரம்புக்கு தகவல் தருகிறது. நரம்பில் இருக்கும் நரம்பு செல்கள் ஆணுறுப்பில் இருக்கும் இரத்த நாளத்தை ஒட்டி இருக்கும். இந்த நரம்பு செல்கள் நானாட்டேர்ஜெர்மிக் - நொன்சோ லைனிஜிக் (nanadrenergic - noncho linergic) அதாவது சுருக்கமாக NANL என அழைக்கப்படுகிறது. இது மூளையின் கட்டளையை பெற்றுக்கொண்டு நைட்ரிக் ஆக்சைடை உற்பத்தி செய்கிறது. இந்த நைட்ரிக் ஆக்சைடு குனுலேட் குக்லேஸ் என்ற நொதியை உற்பத்தி செய்ய வைக்கிறது. இந்த  நொதியானது சைக்கிக் குனானோசைன் மோனோபாஸ்பேட் (cyclic gunnosine monophos phat -CGMP) ஐ உற்பத்தி செய்கிறது. CGMP இரத்த நாளங்களின் மென்மையான தசைகளினை தளர்த்தி விரிவடைய செய்து அழுத்தப்பட்ட இரத்தம் பாய்வதற்கு வழி செய்கிறது. ஆக CGMP ஆணுறுப்பை விரைக்க செய்கிறது. சரி விரைத்துக்கொண்டே இருந்தால் என்னாவது. அதற்குதான் ஆணுறுப்பில் பிசோபியோதெரேசேஸ்-5 (phosphodiesteres -PDE5) என்ற நொதி உற்பத்தியாகிறது. இது ஆணுறுப்பை சுருங்க செய்துவிடுகிறது.

 

 

viagra 2 1வயதானவர்களுக்கு இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்தும், மூளை செயல்படும் திறன் குறைவினாலும், நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி குறைவினாலும், விறைப்பு குறைபாடு ஏற்படுகிறது. அதாவது PDE5 ஆதிக்கத்திலேயே இருக்கிறது. இப்படி இருக்கும் பட்சத்தில்தான் இதய நோய்க்கான இரத்த நாளங்களை விரிவுபடுத்துதவற்காக ஃபைசர் நிறுவன மருத்துவ விஞ்ஞானிகளான ஆண்ட்ரிவ் பெல், டேவிட் பிரவுன், நிக்கோலஸ் டெரேட் மருந்து ஒன்றை கண்டுபிடித்தனர். அந்த மருந்தை மனிதனுக்கு செலுத்தி பரிசோதனை செய்தபோது இதய தமனிகளோடு ஆணுறுப்பிலும் விரிவடைய செய்து பல மணிநேரம் விறைப்புதன்மை ஏற்படுத்தியது புதிய மருந்து. ஆராய்ச்சியாளர்கள் நொந்து போய்விட்டனர். என்னடா இது இதய இரத்த ஓட்டத்திற்கு  மருந்து கொடுத்தால் இது வேறு வேலையை செய்கிறது என்று. அப்போது வந்தது ஒரு புதிய யோசனை. இதயம் போனால் என்ன விறைப்பு ஏற்படுகிறதே இதுவும் ஆண்களுக்கான அருமருந்து தானே என தோன்றியது. அப்படி உருவானது தான் சில்டெனஃபில் எனும் வயாகரா. வயாகரா கண்டுபிடிக்கும் முன்னர் அந்த இடத்தில் ஊசி போட்டால் உடனே விறைப்புதன்மை அடையும். அப்படி ஊசி போட்டு உறவை வைத்துக்கொண்டார்கள் அக்கால பணக்காரர்கள். இது வாய்வழியாக போடும் மாத்திரை என்றதும் கையில காசு வாயில தோசை என்றாகிவிட்டது. இன்று வயாகரா ஸ்டார் மாத்திரையாக கண்டம் விட்டு கண்டம் பாய்கிறது.

 

 


இப்போது கதை என்னவென்றால் வயாகரா எப்படி விறைப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது என்பதுதான். வயாகரா மாத்திரையை முழுங்கியதும் உடலில் வேலை செய்ய ஆரம்பிக்க கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாகிறது. இதை பற்றிக்கூட அமெரிக்கன் இப்படி சொல்வான் “ சாரி வெயிட் பேபி.. இந்த வயாகராவும் டிஷ்னிலேண்ட் மாதிரிதான் இருபது நிமிஷம் உல்லாச பயணம் செய்ய மணிக்கணக்கில் நிற்க வேண்டியதாக இருக்கிறது.”  மாத்திரை இரத்ததில் கலந்ததும் இதிலுள்ள அதிகபடியான நைட்ரிக் ஆக்சைடு CGMP ஐ உற்பத்தி செய்ய வைத்து ஆணுறுப்பின் சுருக்கத்திற்கு காரணமான PDE5  நொதியை காலி செய்துவிடுகிறது. இதனால் தங்கு தடையின்றி அதிக இரத்தம் பாய்ந்து விறைப்புத்தன்மையை ஏற்படுத்துகிறது.

 

 

bedroom pbmபிரச்சினையே இங்குதான் உருவாகிறது. மனித உடல் 11 வகையான PDE நொதிகளை உற்பத்தி செய்கிறது. இவை PDE1,  PDE2, PDE3, PDE4, PDE5, PDE6,  PDE7, PDE8, PDE9, PDE10, PDE11 என PDE குடும்பம் ஆகும். இவை அனைத்து பலவித வேலைகளை உடலில் செய்துவருகிறது. இவற்றின் வேலைகளை முடக்கிவிடுகிறது நம்ம வயாகரா. அதுவும் மிக முக்கியமாக PDE 5 இதனுடன் சேர்த்து PDE 6 மற்றும் PDE 3 சேர்த்து PDE 11 நொதிகளை செயல்பட்டாமல் தடுக்கிறது. இதற்கு மாற்றாக CGMP  இரத்த நாளங்களில் உள்ள மென்மையான தசை தளர்த்தத்தை தூண்டுகிறது. இதனால் ஆணுறுப்புக்கு அதிகமான இரத்தம் பாய்ந்து  நீண்ட நேரம் விரைப்பு தன்மையை ஏற்படுத்துகிறது. PDE5 முழுமையாக கட்டுப்படுத்தி விடுவதால் நீண்ட நேர விரைப்பு ஏற்படுகிறது. இதனால் ஆணுறுப்பில் உள்ள இரத்த நாளங்களில் சிதைவு ஏற்படுகிறது.

PDE 5  உடன் சேர்ந்த PDE6  முடங்கிவிடுகிறது. PDE6  கண்களில் உள்ள விழித்திரை (ரெடினா) செல்களில் உற்பத்தியாகிறது. இது நிறமி மற்றும் ஒளி உணர்விகளுக்கு அடிப்படை. இந்த நொதி செயல்பாடு இந்த மாத்திரையால் முடங்கிவிடுவதால் சில மணிநேரம் பார்வை மங்களாக இருக்கும். பார்க்கும் அனைத்தும் அந்த மாத்திரை போல நீல நிறமாக தெரியும். நீல மாத்திரை, நீலக்காட்சி, நீல நிறம் இப்படி ஒரு பந்தம் ஏற்பட்டு விடுகிறது. தொடந்து இந்த மாத்திரை பயன்படுத்துவதால் கண்பார்வை பறிபோகும் ஆபத்து அதிகம். இதனால்தான் வயாகராவை பயன்படுத்திய பைலட் 6 மணி நேரம் வரை விமானம் ஓட்டக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 2001 இரட்டை கோபுரம் தகர்த்தபோது அமெரிக்க சி.ஐ.ஏ அதிகாரிகள் ’வயாகராவை போட்டுக்கொண்டு விமானத்தை ஓட்டி விட்டான் முட்டாள் பைலட்’ என்றுதான் முதலில் நினைத்தார்கள். அப்புறம் நடந்த கதை வேறு.

 

 


அதேபோலவே PDE3 இதய சுருக்கத்திற்கு காரணமானது. இதுவும் பாதிக்கப்படுவதால் இதய பாதிப்பு உருவாகிறது. எற்கனவே மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கும் இதய நோயளிகளுக்கும் இதய செயலிழப்பு ஏற்பட்டு உயிருக்கு உலை வைக்கிறது. நீடித்த விறைப்புத்தன்மைக்கு அதிக இரத்தம் தேவைபடுவதால் இரத்தத்தை பம்ப் செய்யும் ஒரே உறுப்பான இதயத்திற்கு கடுமையான கூடுதல் வேலை. வயாகரா நீங்கள் உறவு வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் இரத்தத்தை அதிகளவில் செலுத்த தூண்டும். இது சில மணிநேரம் நீடிப்பதால், வயாகரா மருந்து கம்பெனி 4 மணிநேரம் உத்தரவாதம் தருகிறார்கள். இதயத்துடிப்பு அதிகமாகி வயதானவர்கள், இதயநோய் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது அல்லது நெஞ்சு வலி ஏற்படுகிறது. ஏற்கனவே இதயநோய்க்கு மாத்திரையுடன் வயாகராவையும் சாப்பிட்டுவிட்டால் உறவிலேயே முடிந்துவிட்டது அவரின் கதை. PDE11 எழும்பு தசை செல்களில் சுரக்கும் நொதி. இதுவும் பாதிக்கப்படுவதால் கடுமையான உடல்வலி, முதுகு வலி ஏற்படுகிறது.

 

 

heart attackஅதிகப்படியான நைட்ரிக் ஆக்சைடு இரத்தத்தில் கலந்திருப்பதால் சிறுநீரகங்களுக்கு அதிக வேலை கூடுகிறது. சிறுநீரக பிரச்சினை இருப்பவர்களுக்கு சிறுநீரகம் செயலிழந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். கல்லீரல் பாதிப்பும் ஏற்படுத்துகிறது. இதய இரத்த குழாய் அடைப்புக்கு நைட்ரேட் மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள் வயாகராவையும் சேர்த்து எடுத்துக்கொண்டால் ஆபத்து மிக அதிகம். அதற்கு பதில் இதே நோயாளி வயாகராவை மட்டும் எடுத்துக்கொண்டால் நைட்ரேட் மாத்திரையின் வேலையை இந்த வயாகராவின் நைட்ரிக் ஆக்சைடு செய்கிறது. இதனால் இதய நோயளிகளுக்கு ஒருவிதத்தில் நல்லதும் செய்கிறது வயாகரா. மற்றபடி வயாகரா புரோஸ்டேட் புற்றுநோய் மருந்தாகிறது என்ற ஆராய்ச்சி இன்னும் முழுமையடையவில்லை.

 

 

புணர்ச்சிப் பரவசநிலையில் உணர்ச்சிகளை ஒவ்வொரு முடிச்சுகளாக போட்டுக்கொண்டே போய் உச்சக்கட்டத்தில் ஒரே நொடியில் அனைத்து முடிச்சுகளும் அவிழ்க்கும் அற்புதம் உறவு. மாத்திரை இல்லாத ஆரோக்கியமான உறவின்போது மூளையில் எண்டோர்பின் என்ற வேதிப்பொருள் சுரந்து மிகவும் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதனால் தான் நிறைவான உறவுக்கு பின்னர் அப்படியொரு ஆழ்ந்த தூக்கம் ஏற்படுகிறது. ஆனால் இந்த வயாகரா மூளையின் பங்களிப்பே இல்லாத உறவை உருவாக்குகிறது. அதிக இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி மூளையில் தலைவலி ஏற்படுத்துகிறது. இயந்திரத்தனமான உணர்ச்சியற்ற உறவை வைக்க தூண்டுகிறது. மொத்தத்தில் இது மனநலனை பாதிக்கும் மரத்துப்போன புணர்ச்சி.
 

viagra32உதாரணத்திற்கு ஜேம்ஸை எடுத்துக்கொள்வோம். ஜேம்ஸ் சிகாகோ மருத்துவமனையில் டாக்டரை பார்க்க காத்திருந்தார். நார்மல் செக்கப் தான் எல்லாம் முடிந்து போகலாம் என டாக்டர் சொல்ல ஜேம்ஸ் தயங்கியபடி நின்று கொண்டிருந்தார். டாக்டர் ”நீங்கள் போகலாம்” என்றார். ஜேம்ஸ் தயங்கியபடி டாக்டரின் அருகில் சென்று ”எனக்கு வயாகரா வேண்டும்” என்றார். சரி போ என்று டாக்டர் 1 வயாகரா 100 mg என எழுதினார். உடனே ஜேம்ஸ் ”இது போதாது டாக்டர்” என கூற ”அதெல்லாம் முடியாது ஒன்று போதும் போ” என கண்டிப்பாக டாக்டர் கூற, ஜேம்ஸ் விடுவதாக இல்லை. “எனக்கு மூன்று மாத்திரை கொடுங்கள் என் பிரச்சினை உங்களுக்கு எங்கு தெரியபோகிறது டாக்டர். வெள்ளிக்கிழமை முன்னாள் மனைவியை சந்திக்க போகிறேன். சனிக்கிழமை கேர்ள் பிரண்டுடன் பிக்னிக் போகிறேன். ஞாயிற்றுக் கிழமை மனைவியுடன் வீட்டில் இருப்பேன்” என்றார்.

டாக்டர் மூன்று மாத்திரைகளை எழுதினார். ஜேம்ஸ் திங்கள்கிழமை முதல் ஆளாக மருத்துவமனையில் இருந்தார் கை வீக்கத்துடன். ஆச்சரியமடைந்த டாக்டர் என்னாச்சு என்றார். ”போங்க டாக்டர் மாத்திரை போட்டு ஒரு மணிநேரம் காத்திருந்தேன். ஒருத்திக்கூட வரவில்லை அதான்...” இப்படிதான் இருக்கிறது வயாகராவின் கதை. இத்தனை பிரச்சினை இருந்தும் அமெரிக்கா வயாகரா விஷயத்தில் மெளனமகவே இருக்கிறது. அதன் இரகசியமானது கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்காவின் பொருளாதரத்தை தாங்கி பிடித்துக்கொண்டு இருக்கும் ஒற்றை மாத்திரை வயாகரா. அடுத்த பகுதியில் சந்திப்போம்... 

 

முந்தைய பகுதி:

வயாகரா... 20 ஆண்டுகள்! சுகத்தைத் தந்து உயிரைப் பறித்த கதை #1

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...