Skip to main content

பெண் கல்வியின் தொடக்கப்புள்ளி...

Published on 08/03/2018 | Edited on 09/03/2018
juliana morell


மார்ச் 8 உலக பெண்கள் தினமாக கொண்டாடப்படுகிது. பெண்களின் சுயமரியாதைக்கு கல்வி மிகவும் முக்கியம். அதுதான் தற்சார்பைத் தரும், சுயமரியாதையைத் தரும். இக்காலத்தில் பெண்கள் விண்வெளி வரை சென்றுவிட்டனர். ஆனால், 16 ஆம் நூறாண்டில் உலகம் முழுவதும் ஜனநாயகம் என்றால் என்ன என்ற கேள்வி எழக்கூட இல்லாத காலகட்டத்தில் ஒரு பெண் சட்டம் பயின்று அந்த துறையில்  முனைவர் பட்டம் வாங்கியிருக்கிறார் என்றால் நம்பவா முடிகிறது, முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணியும் இவர் தான்.

ஜூலியானா மோரல் என்னும் அந்த ஸ்பானிஷ் பெண், பார்சிலோனாவில் பிறந்தவர். தனக்கு இரண்டு வயது இருக்கும் போதே தன் தாயாரை இழந்தவர். தந்தையின் கவனத்தில் வளர்க்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும் கல்வியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு நான்கு வயது இருக்கும் போதே லத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ மொழி போன்ற மொழிகளை நன்கு கற்றவர். வீட்டிலே கல்வி கற்கும் வசதியிருந்ததால் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றார், ஜூலியானா. தனது எட்டாம் வயதில் தந்தையுடன் லியானுக்கு சென்றார். அங்கு சென்றும் கல்வியைப் பாதியிலேயே விடவில்லை, மீண்டும் கற்க ஆரம்பித்தார். தினசரி பேச்சு , ஆராய்ச்சி, நெறிமுறைகள், இசை போன்றவற்றில் ஒன்பது மணி நேரம் செலவு செய்தார். தன் 12 ஆவது வயதிலேயே மக்கள் முன் தன் ஆராய்ச்சிக் கட்டுரைகளை தனித்துவமாக வெளியிட்டார். பின்னர் அவர் இயற்பியல், மெட்டா பிசிக்ஸ் மற்றும் சட்டமும் பயின்றார்.
 

juliana morell


தந்தையின் அறிவுரைக்கு இணங்க, கானான் மற்றும் சிவில் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற நினைத்தார். மேல் படிப்பிற்காக தந்தையுடன் அவிஞ்ஞான் என்னும் ஊருக்கு சென்றார். 1608 ஆண்டு தன் ஆராய்ச்சி கட்டுரையை பலதரப்பு மக்களுக்கு முன்னும், இளவரசி டி'கொண்டே முன்னும் வெளியிட்டார். அதன் பின் முப்பது வருடங்கள் கான்வென்ட்டில் பிரியராசஸ் என்னும் பெரும் பதவியில் இருந்துகொண்டு, மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கல்வி கற்றுத்தரும் ஆசிரியராக விளங்கினார். 1653 ஆம் ஆண்டு நோயின் காரணமாக மறைந்தார். இவரை பற்றி லோப் டி வேகா என்னும் கவிஞர் புகழ்ந்து எழுதுகையில்," அவள் ஒரு ஏஞ்சல், பொதுமக்களுக்காக அறிவியலை கற்றுத்தந்தவள்" என்கிறார். இவரின் கதையை அறியும் போதே பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரு இன்ஸபிரேஷனாக இருக்கிறார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

 

Next Story

"இந்தியாவிற்கே புரட்சிகரமான திட்டம்" - தமிழக முதல்வருக்கு கெஜ்ரிவால் வாழ்த்து 

Published on 05/09/2022 | Edited on 05/09/2022

 

"Revolutionary project for India" - Kejriwal congratulates Tamil Nadu Chief Minister

 

அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய்  வழங்கும் திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்த நிலையில் இந்த திட்டம் இன்று தொடங்கப்பட்டு உள்ளது. மாதிரி பள்ளிகள் மற்றும் சீர்மிகு பள்ளிகள் துவக்க விழாவில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் இணைந்து தமிழக முதல்வர் இத்திட்டத்தினை துவக்கி வைத்தார். இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பலனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிகழ்வில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,ஒரு மாணவி தன்னுடைய உயர்கல்வியை தொடர அரசு மாதம் 1000 ரூபாய் கொடுப்பதால் மாணவிகள் தங்களது  உயர்கல்வியை தொடராமல் பள்ளி வகுப்பிலேயே நிற்பது குறையும் என்றும் சிறுவயதில் மாணவிகளுக்கு திருமணம் செய்து வைப்பதும்  குறையும் என்றும் கூறியுள்ளார். 

 

மேலும் "ஒரு மாநில முதல்வர் இன்னொரு மாநிலத்திற்கு சென்று பள்ளி மருத்துவமனைகளை பார்வையிடுவதை இது வரை கண்டதில்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின் டெல்லி வந்து பார்வையிட்டு தமிழகத்திலும் இதே போல் அமைப்பேன் என கூறி தற்போது செய்து காட்டியுள்ளார். ஒவ்வொரு மாநிலமும் பிற மாநிலங்களில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்" எனவும் கூறியுள்ளார். 

 

இந்த திட்டத்தை நாடே மிக கவனமாக பார்த்துக்கொண்டுள்ளது. இந்த திட்டம் தமிழகத்திற்கு மட்டுமல்லாது இந்தியாவிற்கே மிகவும் புரட்சிகரமான திட்டம் என கூறியுள்ள அவர்  இந்தியா எங்கும் ஒரு சில மாநிலங்களைத் தவிர பிற மாநிலங்களின் அரசு பள்ளிகளின் நிலையும் அவை செயல்படும் விதமும் கவலை அளிக்கின்றது எனவும் கூறியுள்ளார். மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அரசுப்பள்ளிகளின் தற்போதைய நிலையை மேம்படுத்த முடியும் எனவும் கூறியுள்ளார். 

 

 

Next Story

மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் திட்டம்-இன்று சிறப்பு முகாம்கள்!

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

1,000 rupees per month plan for students - special camps today!

 

கடந்த நிதிநிலை அறிக்கையில் மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித்தொகை திட்டம் திருத்தப்பட்டு கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு இன்று முதல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த திட்டத்துக்காக கலை, அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் மாணவிகளின் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன.  அரசு பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் இந்த உயர் கல்வித் திட்டத்தில் பயன் பெறுவர். ஜூன் 30-ஆம் தேதி வரை நடக்கும் சிறப்பு முகாமில் தகுதியான மாணவியின் பெயரை கல்லூரிகள் பதிவு செய்கின்றன. ஆதார், வங்கி கணக்கு புத்தகம், கல்விச் சான்றுகளுடன் மாணவிகளின் பெயர் பதிவு செய்யப்படவுள்ளன. கல்லூரி வாயிலாக அல்லது www.penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவிகள் நேரடியாக பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.