Skip to main content

உலகில் வாழ்ந்த மிகக் கொடிய விலங்குகள்!

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பூமியில் ஏராளமான விலங்குகள் வாழ்ந்து மறைந்துள்ளன. அவை நீர் வாழ்வனவாகவும், நிலத்தில் வாழ்வனவாகவும் இருந்தன. கற்பனைக்கு எட்டாத வகையில் பிரமாண்டமான உருவத்துடனும், உயிருக்கு அச்சுறுத்தலாகவும் அவை வாழ்ந்திருக்கின்றன. மனித இனம் தோன்றுவதற்கு முன்னரே அவை பூமியின் பிரளயத்தில் மறைந்துவிட்டன. அத்தகைய விலங்குகளின் மிச்சங்கள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்படுகின்றன. அவற்றின் மிச்சங்களை வைத்து உருவகப்படுத்தும்போது அவற்றின் பிரமாண்டம் நமக்கு தெரியவருகிறது. அத்தகைய கொடூரமான விலங்குகளில் 18 வகையான விலங்குகளை இங்கே நாம் பார்க்கலாம்.

 

h

 

 

ஹெலிகாப்ரியன்!


 

இதன் பெயர் ஹெலிகாப்ரியன். இது ஒரு கொடூரமான விலங்குதான். இதன் பற்கள் தாடைகளில் பொருந்தாது. ஆனால், சக்கர வடிவில் வளர்ந்திருக்கும். அந்த பற்கள் இரையை உண்பதற்காக கீழ்தாடையில் பொருந்தும் என்று கருதப்படுகிறது. பல் சக்கரத்தில் சிக்கிய கரும்பு பிழியப்படுவதைப்போல இந்த விலங்கின் பற்கள் உணவை உண்ணும் என்று சில விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதன் உருவம் எப்படி இருக்கும் என்று உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் இந்த விலங்கின் பற்கள் மட்டுமே கிடைத்துள்ளன. பெர்மியன் ட்ரையாஸிக் காலத்தைச் சேர்ந்த, அதாவது சுமார் 25 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய விலங்காக இது கருதப்படுகிறது.

 

 

ee

 

எடஸ்டஸ்!


 

ஹெலிகாப்ரியனைப் போலவே, எடெஸ்டஸ் எனும் இந்த டினோ ஷார்க்கின் உண்மையான உருவமும் முடிவாகவில்லை. இந்த விலங்கிற்கும் நிரந்தரமான பற்கள் இல்லை. புதிய பற்களையும் ஈறுகளையும் உடனடியாக வளர்த்து, பழைய பற்களையும் ஈறுகளையும் முன்னோக்கி தள்ளி பற்களை வெளியே சுருளாக காட்டும் என்று சில விஞ்ஞானிகள் உருவகப்படுத்தினார்கள். வேறு சிலர் அச்சுறுத்தும் வகையிலான பற்களைக் கொண்டிருக்கும் என்கிறார்கள்…

 

 

tt

 

டைட்னோபோவா!

 

6 கோடி ஆண்டுகளுக்கு முன் டைனோஸர்கள் அழிந்தபிறகும், டைட்டனோபோவா என்ற கொடூரமான உயிர்க்கொல்லி பாம்பு இருந்தது. 50 அடி நீளமும், சுமார் ஒன்றரை டன் எடையும் கொண்ட இந்த பாம்பு தனது இரையை விழுங்கி செரிக்கும் தன்மை கொண்டதாக இருந்தது.

 

pp

 

 

பயங்கரமான கடல் தேள்!


 

5 அடி நீளம் கொண்ட மிகப்பெரிய துடுப்பு போன்ற கடல் தேள் 46 கோடி ஆண்டுகளுக்கு முன் கடலடியில் உலவியிருக்கிறது. பென்டெகோப்டெரஸ் டெகோரஹென்ஸிஸ் என்ற பெயருடைய இந்த தேளின் படிமம் 2015 ஆம் ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டது. இன்றும் இந்த தேளின் மிச்சமாக உண்ணிகள், சிலந்திகள், கடல் நண்டுகள் வாழ்கின்றன.

 

 

mm

 

 

தட்டாம்பூச்சி!
 

தட்டாம்பூச்சிகள் எப்போதுமே ஆபத்தில்லாதவை. அவற்றின் இறக்கைகள் இரண்டு அங்குலம் மட்டுமே இருக்கும். ஆனால், தட்டாம்பூச்சியின் மூதாதையான மெகநியூரா என்ற பெரிய தட்டாம்பூச்சியின் இறக்கை வியப்பூட்டுமளவுக்கு இரண்டு அடி பரந்து விரிந்திருக்கும்.

 

dd

 

 

தனது இனத்தையே உண்ணும் மீன்!
 

 

36 கோடி ஆண்டுகளுக்கு முன் கடலில் இப்படி ஒரு மீன் வாழ்ந்திருக்கிறது. 30 அடி வரை வளரக்கூடிய இது, தனது இனத்தைச் சேர்ந்த மீனைத்தான் உணவாக கொள்ளும். இதன் வாய் கண்ணிமைக்கும் வினாடியில் திறந்து இரையைக் கவ்வி விழுங்கும் வகையில் அமைந்திருந்தது. டன்க்ளியோஸ்டியஸ் என்று பெயரிடப்பட்ட இதுவும் ஒரு ஆபத்தான விலங்காகவே கருதப்படுகிறது.

 

y

 

 

டைனோசரை கொல்லும் முதலை!


 

மிகப்பெரிய டைனோசரையே இழுத்து கொல்லும் அளவுக்கு 35 அடி நீளத்துக்கு வளர்ந்த ஆபத்தான முதலையின் படிமம் வட அமெரிக்காவில் கிடைத்துள்ளது. டெய்னோசுச்சுஸ் என்று பெயரிடப்பட்ட இந்த முதலையிடம் கடிபட்ட டைனோசர்களின் படிமங்களும் கிடைத்துள்ளன.

 

 

pp

 

 

காளை வடிவ எலி!
 

 

காட்ஸில்லா என்ற விலங்கை வைத்து வந்த படத்தை பார்த்திருப்போம். 10 அடி நீளமும், 5 அடி உயரமும் உள்ள எலியை விஞ்ஞானிகள் ரேட்ஸில்லா என்று அழைக்கிறார்கள். தாவர உண்ணியான இதற்கு போபெரோமிஸ் பேட்டெர்ஸோனி என்று பெயரிட்டுள்ளனர். நீளமான கால்களைக் கொண்ட இந்த எலிகள் ஒரு காளை மாடு அளவுக்கு பெரிதாக இருக்குமாம். அப்படியானால் இது கடித்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

 

aa

 

 

பயங்கரமான இரால்!

 

பொதுவாக நாம் பார்த்திருக்கிற இரால் புழு மாதிரி இருக்கும். மெல்லிய மேலோடுகளை பிரித்தெடுத்துச் சமைத்து சாப்பிடுகிறார்கள். ஆனால், இந்த இரால் மிகவும் பயங்கரமானது. ஆறு அடி நீளத்தில் நீளமான வளைந்த கொம்பு போன்ற அமைப்புடன் வாழ்ந்திருக்கிறது. அந்த கொம்பு போன்ற அமைப்பில் பற்கள் இருக்கின்றன. நீர்வாழ் உயிரினங்களை அது அந்த கொம்புகளை புரட்டிப்போட்டு கவ்விக்கொள்கிறது. இதன் அறிவியல் பெயர் அனாமலோகேரிஸ்.

 

 

ss

 

 

குட்டை முக கரடி!


 

11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இது கலிபோர்னியா பகுதியால் வாழ்ந்திருக்கிறது. தற்போது காணப்படும் துருவ கரடியைப் போல இன்னொரு மடங்கு பெரியது. சுமார் 12 அடி உயரம் இருக்கும். தினமும் 17 கிலோ இறைச்சி தேவைப்படும் இந்த பயங்கர கரடியின் அறிவியல் பெயர் ஆர்க்டோடஸ்.

 

mm

 

 

மெகாபிரன்ஹா!


 

பயங்கரமான மீன் இது. 1 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இதற்கு இரண்டு வரிசையாக பற்கள் இருக்கும். மூன்று அடி நீளம் இருந்த இந்த மீனைப் போன்ற சிறியவகை மீன்கள் இப்போதும் இருக்கின்றன. ஆனால், இந்த மீன் ஆட்கொல்லி வகையைச் சேர்ந்தது.

 

 

ss

 

 

படுபயங்கர சுறா!
 

 

இப்போது கடலில் வாழ்கிற சுறா மீன்களைப் போல பல மடங்கு பெரிதான பயங்கர ஆட்கொல்லி சுறாக்கள் கடலில் வாழ்ந்து மறைந்திருக்கின்றன. 60 அடி நீளம் வரை வளர்ந்த அந்த பயங்கர சுறாக்களின் வாய் அளவை ஒரு அறிவியலாளர் இப்போதைய சுறாக்களின் வாய் அளவோடு ஒப்பிட்டு நிற்பதைப் பார்க்கலாம். அதிலிருந்தே அந்த சுறாக்களின் பயங்கரத்தன்மையை உணரலாம்.

 

gg

 

 

பத்தடி உயர பயங்கர குரங்கு மனிதன்!


 

ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆசியாவில் வாழ்ந்த குரங்கு மனிதனை ஜிகாண்டோபிதிகஸ் என்று அழைக்கிறார்கள். 10 அடி உயரத்தில் நமது தற்கால மனிதக் குரங்கு, ஒராங்குட்டான்களுக்கு மூதாதையராக இவை கருதப்படுகின்றன. சைவ உணவை உட்கொண்டதாக கூறப்படும் இவற்றில் ஆண் இனத்தைச் சேர்ந்தவை அசைவத்துக்கு மாறியிருக்கின்றன.

 

 

mm

 

 

குழந்தையைச் சாப்பிடும் கழுகு!


 

வானத்தில் வட்டமிடும் கழுகு திடீரென்று கீழ்நோக்கி வந்து கோழிக்குஞ்சுகளை தூக்கிச் செல்வதை பார்த்திருக்கிறோம். 1400 ஆண்டுகளுக்கு முன் நியூசிலாந்து தீவின் தெற்கு பகுதியில் குழந்தைகளையே தூக்கிச் செல்லும் அளவுக்கு ராட்சத கழுகு இனம் இருந்திருக்கிறது. 16 கிலோ எடையுள்ள அந்த கழுகின் ஆபத்து கருதி, நியூசிலாந்தின் மவோரி பழங்குடியினர் அவற்றை கொன்று ஒழித்து விட்டனர் என்கிறார்கள். அந்தக் கழுகை மோவா என்று அழைத்தனர்.

 

 

mm

 

 

நெருப்பைக் கக்கும் டிராகன்!
 

 

ஆஸ்திரேலியாவில் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து அழிந்த மெகலானியா என்ற டிராகன் வகை பார்க்கவே பயங்கரமாக இருந்திருக்கும். ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த பூர்வ குடிகள் இத்தகைய டிராகன்களை பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். 18 அடி நீளமும், 650 கிலோ எடையும் கொண்ட இந்த டிராகன் கோமொடோ டிராகன் வகை விலங்குகளுக்கு உறவு என்று கூறப்படுகிறது.

 

 

tt

 

 

நடுங்க வைக்கும் கழுகு!

 

20 இறக்கை நீளமும், ஆறடி உயரமும் கொண்ட பயங்கரமான கழுகு சரித்திர காலத்துக்கு முன் வாழ்ந்து மறைந்திருக்கிறது. அர்கவன்டிஸ் என்று பெயர் சூட்டப்பட்ட இது கால்நடை மந்தைகளை வேட்டையாடி உண்ணும் என்கிறார்கள்.

 

 

tt

 

 

பயங்கரப் பறவைகள்!

 

வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்காவில் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்தப் பறவைகள் 10 அடி உயரத்துக்கு வளரக்கூடியவை. உணவுக்காக இவை தங்களுடைய வலுவான அலகால் விலங்குகளை கொத்திக் கொல்லுமாம். விலங்குகளின் மண்டை ஓட்டையே சிதறடிக்கும் அளவுக்கு கூர்மையாகவும் வலவாகவும் இவற்றின் அலகு இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

 

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்