ADVERTISEMENT

மாணவர் வழிகாட்டி: தகவல் தொடர்பு துறை படிப்புகளை வழங்கும் ஐஐஐடி! #10

12:31 PM Aug 22, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

பிரத்யேகமான படிப்புகளை வழங்கும் பல்கலைகள் மற்றும் கல்லூரிகளில் படிப்பதன் மூலம் 100 சதவீதம் உடனடி வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் கிடைக்கிறது. மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட துறையில் கூடுதல் நிபுணத்துவமும் பெற ஏதுவாகிறது.

ADVERTISEMENT

இனி கம்ப்யூட்டர்களும், டிஜிட்டல் தொழில்நுட்பமும்தான் உலகை முழுமையாக ஆளப்போகின்றன. இத்தகைய சூழலில் தகவல் தொடர்புத்துறைக்கு வளமான எதிர்காலம் இருப்பதை நாம் சொல்லாமலே புரிந்து கொள்ள முடியும்.

பி.இ., தகவல் தொடர்பு படிப்புகளை கிட்டத்தட்ட எல்லா பொறியியல் கல்லூரிகளும் வழங்குகின்றன. எனினும், இத்துறைக்கென பிரத்யேகமாக இயங்கும் பல்கலைகளில் படிப்பதன் மூலம் படிக்கும் காலத்திலேயே இத்துறையில் உலகளவிலான வளர்ச்சி பற்றியும், அதன் நிபுணர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்புகளும் கிடைக்கின்றன.

ஆனால், தகவல் தொடர்பு துறைக்கென்றே தனித்துவமாக இயங்கும் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி (Indian Institute of Information Technology - IIIT), இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி (International Institute of Information Technology) ஆகிய பல்கலைக்கழகங்களில் வெறும் பிளஸ்-2 மதிப்பெண்களை மட்டும் வைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து விட முடியாது. இந்நிறுவனங்களில் வழங்கப்படும் படிப்புகள், மாணவர் சேர்க்கை நடைமுறைகளை இனி பார்க்கலாம்...

படிப்பின் விவரம்: பி.டெக்.,

அடிப்படை கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி. கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை பயின்றிருக்க வேண்டும்.

படிப்பின் கால அளவு: 4 ஆண்டுகள்

மாணவர் சேர்க்கை நடைமுறை: ஐஐடி நடத்தும் ஜேஇஇ மெயின் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்த விவரங்களை <www.jeemain.nic.in> என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

கல்லூரிகளின் விவரம்:


1. இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி

2. இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி


பயன்பாடு:

எம்.டெக்., எம்.பி.ஏ., உள்ளிட்ட உயர்கல்வியில் சேர்ந்து படிக்கலாம். தனியார் துறையில் வளாக தேர்வு மூலம் உடனடியாக வேலைவாய்ப்பு பெறலாம்.


அரசு மற்றும் தனியார் துறைகளில் பொறியாளர், கண்காணிப்பாளர், தொழில்நுட்ப அலுவலர் போன்ற பணி வாய்ப்புகளைப் பெறலாம். சுயதொழிலும் தொடங்கலாம். வெளிநாடுகளிலும் இத்துறைக்கு எப்போதும் ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

இண்டியன் இன்ஸ்டிடியூப் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி நிறுவனம் வழங்கும் படிப்புகள்:

கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் (Computer Science Engineering)

எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (Electronics and Comunication Engineering)

இன்பர்மேஷன் டெக்னாலஜி (Information Technology)

கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் (Computer Engineering)

எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (Electronics and Comunication Engineering) (Design and Manufacturing)

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (டிசைன் அண்ட் மேனுபாக்சரிங்) (Mechanical Engineering) (Design and Manufacturing)

மெக்கானிக்கல் (ஸ்மார்ட் இன்ஜினியரிங்) / டிசைன் (Mechanical) (Smart Engineering)

கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் அப்ளைடு மேத்தமேடிக்ஸ் (Computer Science and Applied Mathematics)


ஆகிய படிப்புகளை மேற்கண்ட கல்வி நிறுவனம் வழங்குகிறது.


அதேபோல், இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி (International Institute of Information Technology) கல்வி நிறுவனம் பி.டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிகல் அன்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆகிய பட்டப்படிப்புகளை வழங்குகின்றது. இவ்விரு கல்வி நிலையங்கள் தொடர்பாக பின்வரும் இணையதள பக்கங்களில் பார்த்து மேலும் விவரங்களைப் பெறலாம். (அட்டவணையைக் காண்க)

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT