அண்ணா பல்கலைகழகத்தைச் சேர்ந்த மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் ஏரோஸ்பேஸ் ரிசர்ச் (விண்வெளி ஆராய்ச்சி) பிரிவில் ஆளில்லாத சிறிய ரக விமானங்களை (drone) வடிவமைக்கும் மாணவர் குழுவுக்கு ஆலோசகராக நடிகர் அஜித்குமார் கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டார். இதற்காக அவருக்கு வழங்கப்படும் ஊதியத்தை பல்கலைகழகத்தின் ஏழை மாணவர்களின் கல்விக்கு அளித்துள்ளார் அஜித். அவர் வழிநடத்தும் மாணவர் குழுவின் பெயர் 'தக்ஷா' (dhaksha). இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் போட்டியில் இந்த அணி கலந்துகொள்ளவிருக்கிறது. இதற்கான பயிற்சியில் மாணவர்களுடன் அஜித் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்து சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ajith - Copy.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ajith 2 - Copy.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ajith4 - Copy.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ajith3.jpg)
மருத்துவ பயன்பாட்டுக்கான ஆளில்லா சிறிய ரக விமானங்களை வடிவமைப்பதற்கான போட்டியில்தான் கலந்துகொள்ளவிருக்கிறது அஜித் டீம். அவசர காலங்களில், மனிதர்கள் எளிதில் நுழைய முடியா இடங்களில் அல்லது தூரத்தில் இருக்கும் காயமடைந்தவர்களுக்கு உதவும் வகையில் இந்த விமானங்கள் வடிவமைக்கப்படுகின்றனவாம். சர்வதேச அளவில் நடைபெறும் இந்தப் போட்டியில் அஜித்தின் துணையுடன் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையுடன் இருக்கிறது அண்ணா பல்கலைகழக மாணவரணி.
Follow Us