கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (31.01.2026) காலை தொடங்கியது. அதாவது தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி, சனிக்கிழமை காலை 07.30 மணியளவில் தருமசாலையிலும், மருதூர் மற்றும் கருங்குழி வள்ளலார் சன்னிதியிலும், காலை 10 மணியளவில் ஞானசபையிலும் சன்மாா்க்கக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
Advertisment
இதனையடுத்து வள்ளலார் சத்ய ஞானசபையில் 155ஆம் ஆண்டு தைப்பூச  ஜோதி தரிசனம் இன்று (01.02.2026) காலை 6 மணியளவில் நடைபெற்றது. திரையை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டபோது, பல்லாயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து காலை 10 மணி, பிற்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாளான திங்கள்கிழமை (பிப்ரவரி 2) காலை 5.30 மணி என 6 காலங்கள் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது.
Advertisment
வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில் வருகிற 3ஆம் தேதி திருஅறை தரிசனம் நடைபெறவுள்ளது. தைப்பூசத்தையொட்டி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழக முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான ஏராளமான பக்தர்கள் வடலூரில் குவிந்து வருகின்றனர். சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்த வகையில் கடலூர் மாவட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.