பெற்றோர் கொடுத்த அட்வைஸ்; எதற்கெடுத்தாலும் பயப்படும் குழந்தை -‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்:87

jay

jay zen manangal vs manithargal 87

உளவியல் ஆலோசகர் ஜெய் ஜென், தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்குக் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் நம்மிடையே பகிர்ந்துகொண்ட ஒரு கவுன்சிலிங் குறித்து பார்ப்போம்.

ஒரு அம்மாவும் அவருடைய 8 வயது பெண் குழந்தையும் என்னை சந்திக்க வந்தனர். அந்த குழந்தையை வெளியே இருக்க சொல்லிவிட்டு, மகள் எதை கண்டாலும் பயப்படுகிறாள் என்றும் கற்பனை உலகத்தில் யாரோ ஒருவர் தன் முகத்தில் துணியை மூடி தூக்கிட்டு போய்விடுவாங்க என்றெல்லாம் சொல்லி பயப்படுகிறாள் என்று அந்த அம்மா கூறுகிறார். அதன் பின்னர், அந்த பெண் குழந்தையை அழைத்து பேசினேன். ஆரம்பத்தில் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தது. அந்த நேரம் பார்த்து நாங்கள் பேசிக் கொண்டிருந்த இடத்தில் திடீரென கரண்ட் போய்விட்டது. உடனே அந்த குழந்தை, தன் அம்மா கையை பிடித்து பின்னாடி இருக்காங்க, வெட்ட போறாங்க சொல்லிக் கொண்டே இருக்கிறது. சில நொடியிலேயே அந்த குழந்தைக்கு வேர்த்து உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிக்கிறது. அதன் பின்னர் கரண்ட் வந்துவிட்டது. இதுதான் அந்த குழந்தையினுடைய பிரச்சனை.

நான் பேசி அம்மாவை மட்டும் வெளியே போகுமாறு சொன்னேன். அதற்கே அந்த குழந்தை பயப்பட்டது. நான் உடனே எனக்கும் இந்த மாதிரியான பயம் இருக்கிறது என்று குழந்தையின் போக்கிலேயே சொல்லி பயந்த மாதிரி நடித்தேன். இப்படியே அந்த குழந்தையிடம் பேச ஆரம்பிக்கிறேன். அந்த குழந்தை என்ன மொழியில் பேசுகிறதோ அதே மொழியில் பேசுகிறேன். அப்படி பேச பேச, அந்த குழந்தை இயல்பாகிவிட்டது. இதற்கிடையில் அம்மா வெளியே போனதை இந்த குழந்தை கண்டுகொள்ளாமல் ரிலாக்‌ஷ் ஆகிவிட்டது. என்ன மாதிரியான பயம் வரும் என குழந்தை கேட்கிறது. குழந்தை கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி கொண்டே இருக்கிறேன். இதில் அந்த குழந்தைக்கு ஓரளவு நம்பிக்கை வந்துவிட்டது.

இந்த நேரத்தில் அந்த குழந்தையிடம், எப்போது இந்த பயம் வர ஆரம்பித்தது என கேள்வி கேட்டேன். தனக்கு பின்னால் யாரோ ஒருவர் வந்து தன்னை வெட்டி விடுவார்கள் என்றும், காலை பிடித்து யாரோ இழுத்துவிடுவார்கள் என்றும் என பல விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தது. இந்த பயத்தின் ஆரம்ப புள்ளி எது என்பதை நோக்கி நகர ஆரம்பிக்கிறேன். ஆனால், எப்போது இந்த பயம் ஆரம்பித்தது என அவர்களுக்கே தெரியவில்லை. இப்போது டைம்லைன் முறை என்று டெக்னிக்கல் முறையில் எதார்த்தமாக இரண்டு மாதத்துக்கு முன்னாடி தானே இந்த பயம் ஆரம்பித்தது என கேட்டேன். இல்லை, போன வருடத்தில் இருந்தே இருக்கிறது என்று குழந்தை சொன்னது. இப்படியே கொஞ்ச கொஞ்சமா மாதத்தை குறைத்துக்கொண்டே போகிறேன். இறுதியில் கண்டுபிடித்துவிட்டேன் என ரொம்ப வலிமையாக அந்த குழந்தை சொன்னது.

இவர்கள் ஒரு அப்பார்ட்மெண்டில் இருந்திருக்கிறார்கள். அப்போது, ஏதோ ஒரு பொருள் காணாமல் போயுள்ளது. அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து அதே அப்பார்ட்மெண்டில் ஒரு குழந்தை காணாமல் போய் அதன் பின்னர் கண்டுபிடித்து கூட்டிட்டு வந்துவிட்டார்கள். இந்த இரண்டு விஷயத்தை இந்த குழந்தைக்கு புரிய வைப்பதற்காக, நாங்கள் வேலைக்கு சென்ற பிறகு நமது வீடு திறந்து இருந்தால் யாரோ உள்ளே வந்துவிட்டார்கள் என்று அர்த்தம், அப்போது உள்ளே போகக் கூடாது என்றும் வெளியே எங்கு போனாலும் ஜாக்கிரதையாக போக வேண்டும் என்றும் போகிற போக்கில் அட்வைஸ் செய்திருக்கிறார்கள். இது தான் பயத்தின் ஆரம்ப புள்ளியாக இருந்திருக்கிறது. இப்போது எங்கெல்லாம் கதவு திறந்திருக்கிறதோ அங்கெல்லாம் பயம் வருவதாக அந்த குழந்தை சொல்கிறது. அதே போல், எங்கெல்லாம் தனக்கு பின்னால் வருகிறார்களோ அவர்கள் எல்லாம் கடத்திவிட்டு போய்விடுவதாக பயம் வருவதாகவும் சொல்கிறது. சிசிடிவி கேமராவில் யாரோ நடந்து வந்ததை காண்பித்து இப்படிதான் உன்னையும் கடத்தி போய்விடுவார்கள் என்று பெற்றோர் குழந்தையிடம் சொல்லி இருக்கிறார்கள். இது தான் இந்த குழந்தையுடைய பிரச்சனை.

இப்போது டிரீட்மெண்ட் ஆரம்பிக்கிறேன். பெற்றோர் வெளியெ சென்ற பிறகு கதவு திறந்திருந்தால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆனால், எந்த திருடனும் கதவை திறந்து வைத்து திருட மாட்டார்கள் என்று கூறி நீ போய் கதவை திறக்கும் பொழுது உள்ள இருந்து திறக்காம இருந்தால் என்ன அர்த்தம் என்று கேட்கிறேன். வேறு யாரோ இருக்கிறார்கள் என்று சொன்னது. அப்போது என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறேன். அதற்கு உடனே, பக்கத்தில் இருக்கும் ஆண்டி அங்கிள் கிட்ட போய் சொல்ல வேண்டும் என்று குழந்தை சொன்னது. இந்த பிரச்சனை முடிந்துவிட்டது.  அதன் பின்னர், ஒரு சின்ன எக்சர்சைஸ் அந்த குழந்தைக்கு நான் செய்கிறேன். இந்த குழந்தையின் காலை தரையில் வைக்கச் சொல்லி பூமியிலிருந்து எனர்ஜி கால் வழியா உடம்பு முழுவதும்  வருது என்பதற்கான ஒரு சிறு எக்சர்சைஸ் செய்யறேன். இப்போ அந்த பொண்ணு சாதாரணமா உட்கார்ந்து இருக்கிறது. அந்த எக்சர்சைஸ் செய்ய செய்ய,  அந்த எனர்ஜி உள்ள வந்து வலிமையாக அமர்வது மாதிரி உடல் அமைப்பு எல்லாம் மாறுகிறது. இப்போது யாராவது உன்னை வந்து இழுக்க முடிந்தால் என்ன நடக்கும் என்று கேட்க, யாரும் இழுக்க முடியாது கால் பூமியோடு நல்லா டச்ல இருக்கிறது, வலிமையாக இருக்கிறேன் என்றது. இப்படியாக அந்த குழந்தை வலிமையாக பேச ஆரம்பிக்கிறது. அதன் பின்னர், இந்த எக்சர்சைஸ் முடிந்தது.

அதன் பின்னர், அந்த பெண்ணுடைய அம்மாவை வரவழைத்து குழந்தையின் பின்னால் வந்து நிற்குமாறு சொன்னேன். யாரோ ஒருவர் உன் பின்னால் வந்து நிற்கிறார்கள் என்று சொன்னே. அதற்கு, யார் நின்றாலும் தன்னை ஒன்னும் பண்ண முடியாது முன்னாடி வந்து உட்காரச் சொல்லுங்க அங்கிள் என்று அந்த குழந்தை சொன்னது. அடுத்ததாக, இந்த இடத்தில் கரண்ட் போய்விட்டதென்றால் யாராவது வந்து கத்தியால் குத்திவிடுவார்களே என்று விளையாட்டாக சொன்னேன். அங்கிள் என்கிட்ட ஒரு அடி வாங்கி பார்க்கிறீங்களா? என்று ரொம்ப வலிமையோடு குழந்தை சொன்னது. தெரிந்தோ தெரியாமலோ அந்த குழந்தை பயத்தை பிடித்துக் கொண்டது. இப்போது பூமியில் இருக்கும் எனர்ஜியை பிடிக்க வைத்துவிட்டால் பயத்தை விட்டு எனர்ஜியை ஸ்ட்ராங்கா பிடித்துக் கொள்ளும். இதை தான் அந்த குழந்தைக்கு செய்தேன். 6 மாதம் கழித்து அந்த குழந்தையிடம் திரும்ப பேச வேண்டிய சூழல் வந்தது. அதை நான் வேண்டுமென்றே செய்தேன். ஏனென்றால் அந்த எனர்ஜியையும் பிடித்து கொண்டே இருப்பது தவறு. அந்த குழந்தை பயத்தை விட்டு ரொம்ப ஸ்ட்ராங்கா பேசியது. பூமியில் இருந்து கிடைத்துக் கொண்டிருக்கும் எனர்ஜி தேவையா? எனக் கேட்டேன். அதற்கு அந்த குழந்தை குழம்பி போனது. மெதுவாக அந்த குழந்தையிடம் பூமியில் இருந்து கிடைக்கும் எனர்ஜி கூட தேவையில்லை என்று பேசி புரியவைத்து அனுப்பி வைத்தேன். 

Jay zen Manangal vs Manithargal
இதையும் படியுங்கள்
Subscribe