ஐசிசி உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வென்றுள்ளது. இதன் மூலம் வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற சாதனையை இந்திய மகளிர் அணி பெற்றுள்ளது. மேலும் இந்திய அணிக்கு நாட்டின் முக்கிய தலைவர்களும், அரசியல் கட்சியினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

Advertisment

அந்தவகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2025ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒவ்வொரு வீரருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர்கள் முதல் முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளனர். அவர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதன் மூலம் அவர்களின் திறமைக்கும் செயல்திறனுக்கும் ஏற்ற பலனைப் பெற்றுள்ளனர். இந்த திருப்புமுனை தருணம் பெண்கள் கிரிக்கெட்டை இன்னும் உயர்ந்த செயல்திறனுக்கு அழைத்துச் செல்லும். இந்திய கிரிக்கெட் மகளிர் அணி வீரர்கள் இந்தியாவைப் பெருமைப்படுத்தும் விதத்தை நான் பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.  

Advertisment

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவில், “2025ஆம் ஆண்டின் ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஹர்மன்ப்ரீத் கவுரின் உத்வேகமான தலைமையின் கீழ் நமது கிரிக்கெட் வீரர்கள் தங்கள் முதல் உலகக் கோப்பை பட்டத்தை வென்றது ஒரு வரலாற்று சாதனை மற்றும் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணம். ஷஃபாலி வர்மா மற்றும் தீப்தி சர்மாவின் சிறந்த செயல்திறன் - பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் - இந்தியா இந்த மறக்கமுடியாத வெற்றியைப் பெற உதவியது. இந்திய மகளிர் அணியின் விடாமுயற்சி, திறமை மற்றும் வெல்ல முடியாத மனப்பான்மை ஆகியவை மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளித்து, நாட்டிற்கு மகத்தான பெருமையைப் பெற்றுத் தந்துள்ளன”எனக் குறிப்பிட்டுள்ளார். 

modi-ani-mic

பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025இன் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் அற்புதமான வெற்றி. இறுதிப் போட்டியில் அவர்களின் செயல்திறன் மிகுந்த திறமையாலும், தன்னம்பிக்கையாலும் குறிக்கப்பட்டது. போட்டி முழுவதும் அந்த அணி விதிவிலக்கான குழுப்பணியையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தியது. இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி எதிர்கால சாம்பியன்களை விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்கும்”எனக் குறிப்பிட்டுள்ளார்.  

Advertisment

மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “என்ன ஒரு பெருமையான தருணம்!. எங்கள் நீல நிற பெண்கள் வரலாறு படைத்து, பில்லியன் இதயங்களைத் தொட்டுள்ளனர். உங்கள் துணிச்சல், மன உறுதி, கருணை ஆகியவை இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளன. எண்ணற்ற இளம் பெண்கள் அச்சமின்றி கனவு காண ஊக்கமளித்துள்ளன. நீங்கள் ஒரு கோப்பையை மட்டும் உயர்த்தவில்லை. ஒரு நாட்டின் உணர்வை உயர்த்தினீர்கள். ஜெய் ஹிந்த்” எனத் தெரிவித்துள்ளார்.  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “இந்திய கிரிக்கெட்டுக்கான அருமையான ஒரு தருணம். ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பையை நமது நீல நிற பெண்கள் வென்றதில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது. 

mks-1

இந்த அசாதாரண வெற்றிக்கும், திறமை, அமைதி மற்றும் குழுப்பணியின் அற்புதமான வெளிப்பாட்டிற்கும் இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த வெற்றி தலைமுறையினரை பெரிய கனவுகளைக் காணவும், தைரியமாக விளையாடவும் ஊக்குவிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதிமுக பொதுச் செயலாலர் எடப்பாடி வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில்  இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்றுள்ளனர். உங்கள் மன உறுதி, குழு மனப்பான்மை மற்றும் உறுதிப்பாடு நமது நாட்டிற்கு மிகுந்த பெருமையை கொண்டு வந்துள்ளது. 

இந்த வெற்றி வெறும் களத்தில் கிடைத்த வெற்றி மட்டுமல்ல - நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளம் பெண்கள் பெரிய கனவுகளைக் காணவும், நம்பிக்கையுடன் தங்கள் இலக்குகளைத் துரத்தவும் இது ஒரு உத்வேகமாகும். சபாஷ், சாம்பியன்ஸ்” எனத் தெரிவித்துள்ளார்.