ஐசிசி உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வென்றது. இதன் மூலம் வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற சாதனையை இந்திய மகளிர் அணி பெற்றது. மேலும் இந்திய அணிக்கு நாட்டின் முக்கிய தலைவர்களும், அரசியல் கட்சியினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். 

Advertisment

அந்த வகையில் பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025இன் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் அற்புதமான வெற்றி. இறுதிப் போட்டியில் அவர்களின் செயல்திறன் மிகுந்த திறமையாலும், தன்னம்பிக்கையாலும் குறிக்கப்பட்டது. போட்டி முழுவதும் அந்த அணி விதிவிலக்கான குழுப்பணியையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தியது. இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி எதிர்கால சாம்பியன்களை விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்கும்”எனக் குறிப்பிட்டிருந்தார். 

Advertisment

இந்நிலையில் உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியினருடன் பிரதமர் மோடி நேற்று (05.11.2025) இரவு கலந்துரையாடினார். இது தொடர்பான வீடியோவை  சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது கிரிக்கெட் போட்டியின் வெற்றி தருணங்கள், போட்டியின் சூழல், குழு ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து வீராங்கனைகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார். இந்த வீடியோக்க்ளை கிரிக்கெட் ரசிகர்களும், பாஜகவினரும் சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.