ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2025 இந்தியாவில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இத்தொடர், அக்டோபர் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய 8 அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

Advertisment

அதன்படி, நவி மும்பையில் இன்று (30-10-25) இந்தியா - ஆஸ்திரேலியா இடையே அரையிறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து மைதானத்தில் களமிறங்கியது. அதன்படி, ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 119 ரன்களும், எல்லிஸ் பெர்ரி 77 ரன்களும், ஆஷ்லே கார்ட்னர் 63 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக 10 ஓவர் விக்கெட் இழப்பிறகு 49.5 ஓவரில் 338 ரன்கள் எடுத்தனர்.

Advertisment

அதனை தொடர்ந்து, 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இந்திய அணி களமிறங்கியது. அதில் பேட்டிங் செய்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 134 பந்துகளில் 14 பவுண்டரிகள் எடுத்து 127 ரன்கள் எடுத்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 88 பந்துகளில் 10 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் எடுத்து 89 ரன்கள் எடுத்தார். தீப்தி ஷர்மா 24 ரன்களும், ரிச்சா கோஷ்  26 ரன்களும் எடுத்து அவுட்டானார். இறுதியாக 5 விக்கெட் இழப்பிற்கு 48.3 ஓவர்களில் 341 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணியை இந்திய அணியினர் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம், இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா சென்றுள்ளது. 

ஞாயிறன்று மும்பையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா அணி எதிர்கொள்கிறது.

Advertisment