டி20 2026 உலகக் கோப்பை தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (08.03.2026) நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதின இடையே நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி, இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்றொரு துவக்க வீரரான சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து அவுட்டனார். இதைதொடர்ந்து இஷான் கிஷன் 54 ரன்கள், ஹர்திக் பாண்டியா 18 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது.
256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. டிம் சீஃபர்ட் 26 பந்துகளில் 52 ரன்களும், மிட்செல் சாண்ட்னர் 35 பந்துகளில் 43 ரன்களும் எடுத்து அணிக்கு வலு சேர்த்து அவுட்டாகினர். அடுத்தடுத்து இறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து தொடர்ச்சியாக அவுட்டாகினர். இறுதியில் 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தியா அணியிடம் நியூசிலாந்து அணி தோல்வியடைந்தது. இதன் மூலம் டி20 2026 உலகக் கோப்பை தொடரில் இந்தியா அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/09/t20-india-champion-2026-03-09-07-38-06.jpg)
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சாம்பியன்கள். ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த குறிப்பிடத்தக்க வெற்றி, வீரர்களின் சிறப்பான திறமை, மன உறுதி மற்றும் குழுப்பணியைப் பிரதிபலிக்கிறது. அவர்கள் தொடர் முழுவதும் மிகச்சிறந்த மனவலிமையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியனின் இதயத்தையும் பெருமையாலும் மகிழ்ச்சியாலும் நிரப்பியுள்ளது. சிறப்பாகச் செய்தீர்கள், இந்திய அணியினரே” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் சிறப்பான வெற்றியைப் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். கடந்த மூன்று போட்டிகளில் சேட்டன் சஞ்சு சாம்சன் மிகுந்த ஆளுமையுடனும் நிதானத்துடனும் விளையாடி, மிகவும் தேவையான நேரத்தில் ரன்களைக் குவித்ததைப் பார்ப்பது சிலிர்ப்பாக இருந்தது. தொடர் முழுவதும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்தியாவை ஒரு அதிகாரப்பூர்வ வெற்றிக்கு அழைத்துச் சென்றதுடன், 3-வது முறையாக டி20 உலகக் கோப்பையை ஏந்தும் பெருமையான தருணத்தை உருவாக்கிய அனைத்து வீரர்களுக்கும் எனது நல்வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/09/eps-mic-2-2026-03-09-07-38-26.jpg)
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக கம்பீரமான வெற்றியைப் பெற்று, மீண்டும் உலகச் சாம்பியனாக மகுடம் சூடிய இந்திய அணிக்கு வாழ்த்துகள். நிதானம், திறமை மற்றும் கூட்டு நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த வெற்றி இது. மிகப்பெரிய மேடையில், மிக முக்கியமான தருணத்தில் இந்தியா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பேட்டிங்கில் ஆளுமை, துல்லியமான டைமிங் மற்றும் அச்சமற்ற ஷாட்களுடன் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சனுக்கு எனது சிறப்பான பாராட்டுக்கள். ஜஸ்பிரித் பும்ராவும் அதே அளவிற்கான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பந்துவீச்சில் அவர் வீசிய பிரமிக்கத்தக்க ஸ்பெல் ஆட்டத்தின் போக்கை மாற்றியதோடு, உலக கிரிக்கெட்டில் ஏன் அவர் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்கிறார் என்பதையும் நிரூபித்தது. இந்திய கிரிக்கெட்டிற்கும், நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களுக்கும் இது ஒரு பெருமையான தருணம். வாழ்த்துகள் சாம்பியன்களே. உலகக் கோப்பையை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள நமது கிரிக்கெட் அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்க் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/09/modi-mks-eps-2026-03-09-07-37-34.jpg)