டி20 2026 உலகக் கோப்பை தொடர் கடந்த 7ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் ஸ்ரீ லங்கா ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 27வது போட்டி கொலம்போவில் உள்ள ஆர். பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று மாலை 7 மணிக்கு நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் இந்திய அணி, 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. அதில் இஷான் கிஷன் 77 ரன்களும், திலக் ஷர்மா 25 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும் எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர். 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு அடுத்தடுத்தாக பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, ஆரம்பம் முதலே தடுமாறியபடியே விளையாடியது.
உஷ்மான் கான் 44 ரன்களும், அஃப்ரிடி 23 ரன்களும் எடுத்து அணிக்கு வலு சேர்த்த போதிலும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள், இந்தியா அணியின் பந்து வீச்சு தாக்குபிடிக்க முடியாமல் தவித்தனர். தொடர்ச்சியாக அடுத்தடுத்த வீரர்கள் அவுட்டாகினர். இதன் மூலம் 18 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தியா அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/15/t20-2026-02-15-23-41-45.jpg)