19 வயதுக்குட்பட்டோர் கலந்து கொள்ளும் 16வது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த போட்டியின் இறுதி போட்டி ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் இன்று (06-02-26) நடைபெற்றது.

Advertisment

இந்த போட்டியில், ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியோடு மோதியது. முதலில் டாஸ் வென்ற இந்திய பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே, அபிக்யான் அபிஷேக் குண்டு ஆகியோர் சிறப்பாக விளையாடி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் குவித்து அணிக்கு வலு சேர்த்தனர்.

Advertisment

அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 40.2 ஓவரில் 311 ரன்கள் குவித்து இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது. இதன் மூலம், ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதில் இங்கிலாந்து அணியில் காலேப் மேத்யூ பால்கனர், பென் டாக்கின்ஸ், பென் மேயஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். 2000, 2008, 2012, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றிருந்தது இந்திய அணி, 2026லும் 6வது முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.