Advertisment

டி20 உலகக்கோப்பை; 3வது முறையாக மகுடம் சூடிய இந்தியா!

t20wo

டி20 2026 உலகக் கோப்பை தொடர் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் ஸ்ரீ லங்கா ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப் போட்டி குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (08-03-26) நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

Advertisment

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி, இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்றொரு துவக்க வீரரான சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து அவுட்டனார். இதைதொடர்ந்து இஷான் கிஷன் 54 ரன்கள், ஹர்திக் பாண்டியா 18 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. 

Advertisment

256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு அடுத்ததாக நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. டிம் சீஃபர்ட் 26 பந்துகளில் 52 ரன்களும், மிட்செல் சாண்ட்னர் 35 பந்துகளில் 43 ரன்களும் எடுத்து அணிக்கு வலு சேர்த்து அவுட்டாகினர். அடுத்தடுத்து இறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து தொடர்ச்சியாக அவுட்டாகினர். இறுதியில் 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தியா அணியிடம் நியூசிலாந்து அணி தோல்வியடைந்தது. இதன் மூலம் டி20 2026 உலகக் கோப்பை தொடரில் இந்தியா அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது.

2007இல் முதல் கோப்பையை வென்ற இந்தியா, 2024ஆம் ஆண்டிலும் மகுடம் சூடியது. அதன் பிறகு 2026இல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. நடப்பு சாம்பியனான இந்தியா, தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. ஒரு அணி தொடர்ந்து 2 முறை டி20 உலகக் கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும். 2007இல் எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி, 2024இல் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா, 2026இல் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி என தற்போது வரை 3 டி20 உலககோப்பைய இந்தியா வென்றுள்ளது. இந்த வரலாற்று சாதனை வெற்றியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, வான வேடிக்கை காட்டி கொண்டாடி வருகின்றனர். 

world cup t20
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe