Advertisment

கவிஞர் வைரமுத்துவின் புத்தம் புதிய படைப்பு ‘மகா  கவிதை’

  Vairamuthu New book

Advertisment

இதுவரை எந்த ஊடகத்திலும் வெளிவராத கவிஞர் வைரமுத்துவின் புத்தம் புதிய படைப்புக்கு ‘மகா கவிதை’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. நூலின் தலைப்பும் முகப்பும் வெளியிடப்பட்டிருக்கின்றன. கவிஞர் வைரமுத்துவின் 39 ஆம் படைப்பு இது.

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை நூல் இதுவாகும். நிலம் - நீர் - தீ - வளி - வெளி எனும் ஐம்பூதங்களையும் ஆராய்ந்து படைத்த கவிதையாக ‘மகா கவிதை’ அறியப்படுகிறது.

தமிழில் இந்த வகை இலக்கியத்தில் இதற்கு முன் இல்லாத புதுமுயற்சி என்று சொல்லலாம். சூர்யா பதிப்பகம் நூலைத் தீவிரமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறது. சில மாதங்களில் நூல் வெளியிடப்படும் என்று கவிஞர் வைரமுத்து தரப்பிலிருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.

Vairamuthu
இதையும் படியுங்கள்
Subscribe