Skip to main content

நவீன கவிஞர்களிடமிருந்து கவிதைகளைக் காப்பாற்றவேண்டும்! ‘தன்முனைக்’ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் முழக்கம்!

Published on 02/07/2018 | Edited on 02/07/2018

தெலுங்கில் புகழ்பெற்றக் கவிதை வடிவமான ‘நானிலு’  தமிழில் ‘தன்முனைக்’ கவிதை என்ற பெயரில் மலர்ந்திருக்கிறது. இந்தத் தன்முனை வடிவத்தில் 31 கவிஞர்கள் எழுதிய ‘ நான் நீ இந்த உலகம்’ என்ற கவிதைத் தொகுப்பினை கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம் தொகுக்க, அதை ஓவியா பதிப்பகம் சார்பில் வதிலை பிரபா பதிப்பித்திருக்கிறார். இவ்வகையில் தன்முனைக் கவிதைகளின் முதல் தொகுப்பு நூலான ‘நான் நீ இந்த உலகம்’ நூல் வெளியீட்டு விழா 1-ந் தேதி மாலை சென்னை எழும்பூரில் உள்ள இக்சா அரங்கில் சிறப்புற அரங்கேறியது. வதிலை பிரபா வரவேற்புரை நிகழ்த்த, கவிஞர் பாரதி பத்மா நிகழ்ச்சிகளைக் கவித்துவமாகத் தொகுத்து வழங்கினார். 


 

Save poetry from modern poets! Slogan of 'Thamunai Naik'


 

இவ்விழாவிற்குத் தலைமை ஏற்று நூலை வெளியிட்டுப் பேசிய, நக்கீரன் தலைமைத் துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் ‘இன்று இலக்கிய உலகம், குறிப்பாக கவிதை உலகம், குப்பை கூளம் நிறைந்ததாக மாசடைந்து ஆரோக்கியக் குறைவோடு இருக்கிறது. அழுக்குச் சிந்தனைகள், ஆபாசக் சொற்குப்பைகள்,  பிற்போக்குக் குரல்கள், அதி நவீனம் என்ற பெயரில் தெளிவுக்கு மாறான குழப்ப கூச்சல்கள் என்று, இன்று பெரும்பாலான கவிதைகள் மூச்சுத் திணறுகின்றன. காரணம் நவீன கவிஞர்கள் என்கிற பெயரில் இருக்கும் சிலர் தமிழ்க் கவிதைகளை காப்பாற்றுவதாகச் சொல்லிக்கொண்டு அவற்றின் கழுத்தை நெறித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து முதலில் நாம் தமிழ்க் கவிதைகளைக் காப்பாற்றவேண்டும். கவிதைகள் மனிதத்துக்கு அரண் செய்வதாகவும், மானுட ஈரத்தைக் காப்பதாகவும் இருக்க வேண்டும். அடுத்தவருக்கு ஒரு குவளை நீர் கொடுத்தால் கூட அதில் ஒரு சொட்டு மனிதம் இருக்கவேண்டும். நீங்கள் ஒருவருக்கு அறுசுவை விருந்து கொடுத்தால் கூட அதில் ஒரு பருக்கையாவது மனிதம் இருக்கவேண்டும். மனிதர்களிடையே, அன்பை வளர்த்து மனிதத்தைக் காப்பாற்றுவதற்காத்தான் இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன’ என்றார் அழுத்தமாய்.

பண்ணைத் தமிழ் சங்கத் தலைவர் கவிக்கோ துரை.வசந்தராசனோ ‘கொள்கையற்ற இலக்கியங்கள் காணாமல் போய்விடும். கொள்கையற்ற இலக்கியம், வெறும் வார்த்தைகளின் பிணமாகத்தான் இருக்கும்’ என்றார் உணர்ச்சிமயமாக. 


 

Save poetry from modern poets! Slogan of 'Thamunai Naik'


 

கவிஞர் வெற்றிப்பேரொளியோ, தமிழில் இதுபோன்ற புதிய வரவுகள் வரவேண்டும். தமிழில் 96 சிற்றிலயங்கள் இருக்கும் நிலையில் நீடாமங்கலத்தைச் சேர்ந்த மறைந்த மருத்துவர் மறையரசன்தான், ‘பிள்ளைத்தமிழ்’ போல் ‘முதுமைத்தமிழ்’ என்ற சிற்றிலக்கிய நூலைத் தமிழில் முதன்முதலில் படைத்தார். அதுபோல் இது தமிழுக்குப் புதுநூல் என்றார். 
 

முன்னாள் துணை ஆட்சியர் முருகன், குமரன் அம்பிகா, மயிலாடுதுறை இளையபாரதி, உதயக்கண்ணன், தினமணி திருமலை, வசீகரன், வட சென்னை தமிழ்ச் சங்க இளங்கோவன், கவிஞர் ஜலாலுதீன், கவிஞர் வீரசோழன் கா.சோ.திருமாவளவன் போன்றோர் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர். தொகுப்பாசிரியர் கவிஞர் க.ந.கல்யாணசுந்தரம் நன்றி கூறினார். தமிழின் முதல் தம்முனைக் கவிதைத் தொகுப்பு நூலின் வெளியீட்டு விழா என்பதால், இது இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்திருக்கிறது.

-சூர்யா

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.