Krithika tharan - Nakkheeran publication book -

Advertisment

கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் பெங்களூரு, டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் வீதியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் எதிரில் உள்ள தி இன்ஸ்டிடுயூஷன் ஆஃப் எஞ்சினியர்ஸ் வளாகத்தில் 2024ஆம் ஆண்டு டிச.20 முதல் 29ஆம் தேதிவரை நடைபெறவிருக்கும் 3ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு சிறந்த தமிழ் இலக்கியங்களை அடையாளம் கண்டு பாராட்டும் பொருட்டு, கர்நாடக மற்றும் கர்நாடகம் அல்லாத‌ தமிழ் இலக்கியவாதிகள், பதிப்பாளர்களுக்காக நடத்தப்பட்ட சிறந்த தமிழ்நூல் போட்டியில் தமிழ்ப் புத்தகத் திருவிழாவில் டிச.21ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கும் விழாவில் சிறந்த தமிழ்நூல்கள் போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

இதில் கிர்த்திகா தரன் எழுதிய எரியும் மண் மணிப்பூர் (பயணக்கட்டுரை) இரண்டாம் பரிசைப் பெற்றுள்ளது. நக்கீரன் இதழில் தொடர்ச்சியாக மணிப்பூர் கலவரத்தை பற்றி எழுதப்பட்ட தொடரை நக்கீரன் பதிப்பகம் புத்தகமாகவெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு படைப்பாளிகள் பரிசு பெற்றுள்ளனர். தமிழுக்கு அழிவில்லாத அறிவார்ந்த இலக்கியங்களை படைத்தளித்து, பரிசுகளை வென்றிருக்கும் இலக்கியவாதிகள், அதை வெளியிட்ட பதிப்பகங்களுக்கு கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், 3ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழா குழுவினர் சார்பில் பாராட்டுதல்களை தெரிவித்து உள்ளது.