திமுக தலைவர் கலைஞரின் மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் டென்மார்க்வாழ் தமிழரான அன்பு அறிவெழில்எழுதிய இரங்கல் பா...
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/k_1.jpg)
சென்று வா என்றுரைத்தால்
வென்று வரும் தொண்டர்கள் நாம்,
தலைவன் வகுத்த பாதையில்
தடம் மாறா நேர் வழியில்
தளபதியின் துணையாக
தகர்த்தெறிவோம் சூழ்ச்சிகளை.
நெஞ்சிற்கு நீதியுண்டு!
நினைவெல்லாம் நீயுண்டு.
பகுத்தறிவு பகலவரே !
முத்தமிழ் காவலரே !
ஓய்வறியாமல் உழைத்தவரே !
அண்ணனோடு இணைந்தவரே !
அறிவின் ஒளிகொடுப்பாய்
உதிக்கும் சூரியனாய் என்றென்றும்...
-அன்பு அறிவெழில் (டென்மார்க்)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)