Skip to main content

சாகித்ய விருதாளரை வன்மமாக விமர்சிப்பதா? - ஜெயமோகனுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Published on 26/08/2022 | Edited on 27/08/2022

 

Criticizing the Sahitya awardee harshly? - Condemnation to Jayamohan!

 

இந்தியாவில் சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2022ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கார் விருது ‘மல்லிகாவின் வீடு’ என்ற சிறுகதை தொகுப்பை வெளியிட்டிருக்கும் எழுத்தாளரும் ராணி இதழ் ஆசிரியருமான ஜி.மீனாட்சிக்கும், ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ என்ற கவிதைத் தொகுப்புக்காக ‘யுவ புரஸ்கார்’ விருது பொள்ளாச்சியைச் சேர்ந்த கவிஞர் ப.காளிமுத்துவுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

இவர்களில் கவிஞர் ப.காளிமுத்துவுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டதை எழுத்தாளர் ஜெயமோகன் கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார். இது பலரின் கண்டனத்தைக் குவித்துவருகிறது. ஜெயமோகன் தன் முகநூல் பக்கத்தில் “இந்த இளைஞர் இவ்விருதால் ஓர் அவமதிப்பையே அடைந்துள்ளார். இதை அவருக்கு அளித்தவர்கள் அவரை சிறுமை செய்கிறார்கள். அவர் தன் எழுத்து பற்றிய போலியான நம்பிக்கை கொள்ளச் செய்கிறார்கள்" என்று சொல்லி இருப்பதோடு, “அவருக்கு முழுமையான புறக்கணிப்பே எஞ்சும்” என்றும் சாபம் விட்டிருக்கிறார்.

 

Criticizing the Sahitya awardee harshly? - Condemnation to Jayamohan!

 

இது குறித்துப் பேசிய வட சென்னைத் தமிழ்ச் சங்கத் தலைவர் இளங்கோ “இது ஜெயமோகனின் மிகமோசமான மேட்டிமைப் பார்வை. ஆதிக்கத்துக்கு எதிராக எழுதக்கூடியவர் என்பதற்காகவும், அதிக அறிமுகம் ஆகாதவர் என்பதற்காகவும் தான் அவர் காளிமுத்து மீது ஆத்திரத்தைக் கொட்டி இருக்கிறார். சாகித்ய அகாடமி நிறுவனத்தின் நடுவர் குழுதான் இவ்விருதுகளைத் தீர்மானிக்கிறது. ஜெயமோகன் இந்தத் தேர்வுக் குழுவையும் மட்டரகமாகப் பேசியிருக்கிறார். அவர் ஒருவகையில்  சாகித்ய அகாடமியில் இருக்கும் கவிஞர் சிற்பியை மறைமுகமாகக் சாடுகிறார் என்பது தெரிகிறது. ஒரு எளிய படைப்பாளி எந்தவித தனி முயற்சியும் இன்றி, விருது பெறுகிறார் என்றால் அவரைப் பாராட்ட வேண்டும். இல்லையென்றால் சும்மா உட்காரவேண்டும். அதை விடுத்து ஜெயமோகன் மட்டமாக விமர்சனம் செய்து தன் புத்தியின் அகோரத்தைக் காட்டி இருக்கிறார். இப்படிப்பட்ட வக்கிரத்தை வெளிப்படுத்துவதன் மூலம், ஜெயமோகன்தான், அம்பலப்படுகிறார்” என்கிறார் அழுத்தமாக. 

 

Criticizing the Sahitya awardee harshly? - Condemnation to Jayamohan!

 

எழுத்தாளரும் இலக்கிய விமர்சகருமான ஜே.மஞ்சுளாவோ தன் முகநூல் பக்கத்தில் ஜெயமோகனுக்கு ஒரு பகிரங்கக் கடிதத்தை எழுதியிருக்கிறார். அதில் அவர், “அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகனுக்கு, ஜே.மஞ்சுளாதேவி எழுதுவது. சாகித்ய அகாதமி, யுவபுரஸ்கார் விருது பற்றி நிறைய புலம்பி எழுதியிருந்தீர்கள். நீங்கள் சொல்பவர்கள் மட்டும்தான் இலக்கியவாதிகள், விஷ்ணுபுர விருது பெற்றவர்கள் மட்டும்தான் திறமையாளர்கள் என்று நீங்கள் நம்பலாம், தவறில்லை. ஆனால். அதை மற்றவர்கள் மீது திணிப்பதற்கு உங்களுக்கு யார் சார் உரிமை கொடுத்தார்கள்? விருதுபெற்ற ப.காளிமுத்துவை உங்களுக்கு எத்தனை நாளாகத் தெரியும்? விருது அறிவிப்பிற்குப் பிறகுதானே. எந்த தைரியத்தில் சொல்கிறீர்கள் இனிமேல்தான் அவர் எழுதவேண்டும் இனிமேல்தான் வாசிக்கவேண்டும் என்று. அவர் வாசிப்பது கிடக்கட்டும். நீங்கள் அதை வாசித்துத்தான் எழுதினீர்களா? ஒரு தனிமனிதன், படித்தான், படிக்கவில்லை என்று சொல்வதற்கு உங்களுக்கு யார் சார் உரிமை தந்தார்கள்.

 

உங்களை ஆசான் என்று கொண்டாடுபவர்களுக்குத்தான் பரிசைத் தர வேண்டும் என்று நீங்கள், பதிவு பண்ணாத உங்கள் அமைப்பின் விருதுக்கு வேண்டுமானால் முடிவு செய்யலாம். ஆனால் அரசின் அமைப்பு விருது ஒற்றை நபரால் முடிவு செய்யப்படுகிறது என்று நீங்கள் நினைப்பது உங்கள் அறியாமையைத்தான் காட்டுகிறது. இது உங்களுக்கு வயதாகிவிட்டதன் அறிகுறி. இன்றைய இளைஞர்கள், 'போங்க பூமர்' என்று சொல்லிவிடுவார்கள் சார். கவனமாக இருங்கள். இவ்விருது, போட்டி அல்ல.. வளர்ந்து வரும் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவதற்காக அளிப்பது என்பதை மறந்துவிடுகிறீர்களே.


 

Criticizing the Sahitya awardee harshly? - Condemnation to Jayamohan!

 


தமிழில் நாவலே இல்லை  என்று பரபரப்பைக் கிளப்புவீர்கள், நாவலைப் படம் ஆக்கும் பணிக்கு உங்களைச் சேர்த்துக்கொண்டதும் அது பற்றி எழுதிய கட்டுரைகளை அழிப்பீர்கள். இதெல்லாம்தான் நவீன இலக்கியவாதியின் அடையாளம் என்றால், பாவம் காளிமுத்துவால் இதை எல்லாம் எப்போதும் செய்யமுடியாது.

 


நீங்கள் எழுதியதன் உச்சபட்ச வன்மம், பொள்ளாச்சி பற்றிக் குறிப்பிட்டதுதான். “பொள்ளாச்சியில் இருந்து இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த உபாதை இருக்கும்” என்று எழுதியதற்கு என் கடும் கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். எந்த அர்த்தத்தில், யாரைப் புண்படுத்த நினைத்து இதைச் சொல்லியிருந்தாலும் சரி, இவ்வரிகள் உங்களின் தரத்தைபாதாளத்தில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எதைப் பற்றியும், ’சில காலங்கள்"  என்று காலத்தை நிர்ணயம் செய்ய நீங்கள் யார், கடவுளா? உங்கள் காலம் எவ்வளவு  என்று நிர்ணயிக்க உங்களால் முடியுமா? அறுபது ஆண்டுகள் கொண்டாடியிருக்கிறீர்கள். அறுபத்தாறு என்று பதட்டம் வேண்டாம். பணிசெய்யும் படத்தின் 2,3,4,5 என்று எண்ணற்ற பாகங்களிலும் பணிசெய்து நூறாண்டு வாழுங்கள்.

 


எங்கள் பொள்ளாச்சிப் பகுதியில் திட்டும்போது கூட, 'நாசம் அத்துப் போனவனே' என்பதுதான் எங்கள் பண்பாடு.’ என்று செவிட்டில் பளீர் பளீர் என்று அறைந்திருக்கிறார். கோவையைச் சேர்ந்த கவிஞர் சோழ நிலாவோ “பொள்ளாச்சி  மண்ணின் ஆர்ப்பாட்டமில்லாத அர்ப்பணிப்பு மிக்க எளிய கிராமத்து  இளைஞர் கவிஞர் ப. காளிமுத்துவைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? பிரபலமானவர்களும் கோடிகளில் புரளுபவர்கள்  மட்டும்தான் விருது வாங்க வேண்டுமா..? தமிழ் அர்ப்பணிப்பு மிக்க ஒரு எளிய கவிஞர் விருது வாங்கினால் ஏன் வெந்து புலம்பிச் சாகுறீங்க? கவிதை எழுத சங்க இலக்கியம் தேவையில்லை. வானத்தைப் பார்த்து எழுத வேண்டிய எந்த அவசியமும் இல்லை. மண்ணையும் மக்களையும் படித்தால் போதும். அறம் என்று தொகுப்பு விட்டால் மட்டும் பத்தாது அறமும் இருக்கவேண்டும்.

 

அதெல்லாம் உனக்கு எங்க தெரியப் போகுது? மாவு கடையில அறமே இல்லாமல் சண்டை போட்ட ஆளாச்சே நீ. இதுதான் கவிதை இது கவிதை என்று தீர்மானிக்க நீ யாரு? எந்தக் கொம்பனாலும் தீர்மானிக்க முடியாது. சமீபகாலமாகத்தான் எளிய படைப்பாளிகளைத் தேர்வு செய்து கொண்டிருக்கிறது சாகித்திய அகடாமி. அது உனக்கு பொறுக்கலையா? எனக்கு நிறைய வேலை இருக்கு. இன்னும் கோவப்பட்டா ரொம்ப மோசமாப் பேசிடுவேன். வன்மையான கண்டனத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். உனக்கும் பொன்னியின் செல்வன் முடியும் தருவாயில் இருக்கிறது. அதற்கான வேலையை போய்ப் பாரு. குறை சொல்றத விட்டுட்டு” - என்று ஜெயமோகனுக்கு அறிவுரை கூறுகிறார்.

 

ஜெயமோகன் தனது விமர்சனத்தின் மூலம் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறார்.

 

 


இலக்கியன்

 

 

 

Next Story

கோலிவுட் vs மோலிவுட்; எழுத்தாளர் ஜெயமோகனுக்கு சரமாரி கேள்வி!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Kerala's famous writer unni asked writer Jeyamohan

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ளது குணா குகை. இந்தக் குகையைக் கண்டறிந்த ஆங்கிலேயேர்கள் இதற்கு டெவில் கிச்சன் என பெயர் சூட்டினர். மிகவும் ஆபத்தான இந்தக் குகையில், கடந்த 33 வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் நடித்த குணா என்ற திரைப்படம் உருவானது. அதன் பிறகே, டெவில் கிச்சனாக இருந்த இந்தக் குகை, குணா குகை எனப் பெயர் பெற்றது.

இந்தக் குகையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட மலையாளத் திரைப்படம் `மஞ்சும்மல் பாய்ஸ்'. இந்தத் திரைப்படம் கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மஞ்சும்மல் பாய்ஸ்' படக்குழுவினரை நேரில் சந்தித்து கமல்ஹாசன், தனுஷ், விக்ரம் எனப் பலரும் பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்தத் திரைப்படத்தைப் பார்த்த அவர், அதனை விமர்சிக்கும் விதமாக ஒரு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், சமகால சினிமாவை நான் விமர்சனம் செய்வதில்லை, கருத்தே சொல்வதில்லை. ஏனென்றால் நானும் இதில் இருக்கிறேன். இது கலை ஒன்றும் அல்ல, பிரச்சாரம்கூட அல்ல. வெறும் வணிகம். நூறு விழுக்காடு வணிகம். ஆகவே ஒரு வணிகர் இன்னொருவரின் வணிகத்தை அழிக்கலாகாது. அது ஒரு உள்நெறி. ஆனால் 'யானை டாக்டர்' எழுதியவன் என்கின்ற முறையில் இதை எழுத வேண்டியிருக்கிறது. புகழ்மொழிகள், புல்லரிப்புகள், வாழ்த்துகள் வழியாக நேற்று 'மஞ்சும்மல் பாய்ஸ்' என்னும் மலையாளப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. என அந்தக் கட்டுரையை ஆரம்பித்த எழுத்தாளர் ஜெயமோகன், மஞ்சும்மல் பாய்ஸ் எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது. ஏனென்றால் அது காட்டுவது புனைவு அல்ல. அதே மனநிலைதான் தென்னகம் முழுக்க சுற்றுலா வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் இந்தப் பழக்கம் உள்ளது. இவர்கள் சுற்றுலா மையங்களுக்கு மட்டுமல்ல அடர் காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள். குடி..குடி..குடி.. அவ்வளவுதான். எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல், குறைந்தது பத்து தடவையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் பகுதிகளில் இந்த மலையாளக் குடிகாரப் பொறுக்கிகள் சாலையில் அடிதடியில் ஈடுபட்டிருப்பதை நான் நேரில் பார்த்துள்ளேன். அவர்களின் வண்டிகளின் இருபுறமும் வாந்தி வழிந்துகொண்டிருக்கும். இந்தப் படத்தில் காட்டப்படுவதுபோல. குடித்து முடித்த புட்டிகளை தூக்கி வீசி உடைத்துக்கொண்டே இருப்பார்கள். என அந்தக் கட்டுரையில் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு கேரளா மட்டுமல்லாது தமிழ் சினிமா துறையில் இருந்தும் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. மேலும் பலர் சமூக வலைத்தளங்களிலும் எழுத்தாளர் ஜெயமோகனை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், கேரளாவின் பிரபல எழுத்தாளரான உண்ணி, ஜெயமோகனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மலையாள மனோரமாவில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஜெயமோகன் எழுதிய கட்டுரையைப் படித்தேன். அதில் அவ்வளவு விஷமத்தனம் உள்ளது. குடிப்பவர்கள் எல்லாரும் அயோக்கியர்கள் என்ற வாதம் மேட்டுமைத்தனத்தின் வாதமே. மலையாளிகளில் கள்ளிறக்கும் தொழில் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆண் பெண் பேதமின்றி, மது அருந்துபவர்களும் இருக்கிறார்கள். இப்படி இருக்க, இதனை ஒதுக்கப்பட்டவர்களின் நாகரிகமில்லாத களியாட்டமாகவே சிலர் பார்க்கிறார்கள். இந்த ஆதிக்க உணர்வுதான் ஜெயமோகன் வாதத்தின் பின் இருக்கும் உண்மை.

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், அடித்தட்டு வாழ்க்கை வாழும் நண்பர்களின் கதை. படத்தில் அவர்கள் குடிகாரர்கள் என்றும் பொறுக்கிகள் என்றும் காட்டினாலும், ஆபத்தான கட்டத்தில் தனது நண்பனைக் காப்பாற்றிய மனிதாபிமானம் இந்த ஆசாமி கண்ணில் ஏன் படவில்லை. இயற்கையின் சீற்றத்தால், பிரச்சனை ஏற்பட்ட போது, மலையாளிகளும், தமிழரும் பரஸ்பரம் கைநீட்டித் தொட்டுக் கொண்டார்கள். அவர்களில் குடிகாரர்களும் இருந்தார்கள் எனவும் சாடியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், அந்தக் கட்டுரையின் இறுதியில் சில கேள்விகளையும் எழுப்பியிருந்தார். அதில், கேரளக் கடற்கரைகளில் மாலை நேரங்களில் செல்லப் பயமாக இருக்கிறதா?... உங்களுக்குள் இருக்கும் கிழவனுக்கு இளைஞர்கள் மேல் ஏன் இத்தனை வெறுப்பு?... உங்களைப் போல கீழ்மைக்கு அடிமையாகாமல் மலையாளி இளைஞர்கள் தங்களை நிரந்தரமாக நவீனப்படுத்திக் கொள்வதாலா?... கேரளத்துக்கு கதை எழுத வந்த உங்களுக்குத் திரைக்கதை எழுதத் தெரியவில்லை என்பதைப் புரிந்துகொண்டு தவிர்த்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கான பழிவாங்குதலா இந்த வசை மாரி?... உள்ளிட்ட காட்டமான கேள்விகளையும் எழுப்பியுள்ளார். தமிழகம் மற்றும் கேரளாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் எழுத்தாளர்கள் இப்படி விமர்சனம் செய்துகொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

"மணிரத்னம், வெற்றிமாறன் இயக்க ஆசைப்பட்ட கதை" - இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில்

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

Rathasaatchi movie press meet

 

ரஃபீக்  இஸ்மாயில் இயக்கத்தில் அனிதா மஹேந்திரன் மற்றும் டிஸ்னி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'ரத்தசாட்சி'. இப்படத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகனின் கைதிகள் சிறுகதையினை தழுவி இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் நாளை (09.12.2022) ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. 

 

ad

 

அப்போது நடிகர் கண்ணா ரவி பேசுகையில், "இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இந்தப்படத்தில் மிகவும் சவால் மிகுந்த முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளேன். இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் நாவலை திரையில் கொண்டு வந்த விதம் பிரமிப்பானது. இப்படத்தில் எனக்கு ஒத்துழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவரையும் கவரும்" என்றார். 

 

இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் பேசுகையில், "மணிரத்னம் மற்றும் வெற்றிமாறன் இந்தக் கதையைப் படமாக செய்ய ஆசைப்பட்டார்கள். அவர் பலரைத் தாண்டி ஜெயமோகன் எனக்கு இந்தக் கதையைக் கொடுத்தார். ஒளிப்பதிவாளருடைய பணி இந்தக் கதையை மேம்படுத்தி இருக்கிறது. இசையமைப்பாளர் உடைய பங்கு கதையின் போக்குடன் ஒத்துப் போயுள்ளது.  இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.