"ஆவலோடு எதிர்பார்த்த வசந்த காலம்... இந்த வருடம் கரோனா காலம் ஆகிவிட்டது.." - ஒரு கவிதையும், பல உண்மைகளும்!

வசந்தகாலம்.

பூக்கள் பூக்கும் தருணம்.

மரங்களும் அழகு . மரங்களில் இருந்து உதிரும் இலைகளும் அழகு .

என் பெயர் சொல்லி பறவைகள் கூவி அழைப்பதாக உணர்ந்தேன்.

தேனீக்கள் இன்னிசை பாட ஆரம்பித்து விட்டன.

மலர்களின் வாசமும் புற்களின் வாசமும் இணைந்து நம்மை தனி ஒரு உலகத்துக்கு அழைத்து செல்லும்.

இனிமேல் கனத்த உடைகள் தேவைப்படாது. மெல்லிய உடைகளே தேவைப்படும்.

நாம் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த வசந்த காலம்...இந்த வருடம் கரோனா காலம் ஆகி விட்டது.

இந்த மாதத்தில்தான் காற்றில் பறக்கும் மகரந்த தூள்களால் இலையுதிர்கால மெல்லிய தூசிகளால் தும்மலும் மூக்கடைப்பும் ஏற்படும்.

இந்தத் தும்மல்களால் இன்னும் வேகமாக கரோனா பரவ வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நாம் வேண்டி விரும்பி வரவேற்கும் வசந்த காலம் இந்த வருடம் நமக்கு அச்சத்தைத் தருவதாக அமைந்து விட்டது.

எத்தனை நாடுகள்...எத்தனை வல்லரசுகள்.. எவ்வளவு ஆயுதங்கள்! உலகத்தை அழிக்கச் சொல்லி இருந்தால் இந்தநேரம் அழித்திருப்பார்கள்.

இப்போது காப்பாற்ற வேண்டி அல்லவா உள்ளது .எல்லா நாடுகளுமே தடுமாறுகின்றன.

இனிமேலாவது ஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை விட மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கு அதிகமான நிதியை ஒதுக்கட்டும் உலக நாடுகள்.

வணிக நோக்கம் இல்லாத மருத்துவக் கண்டுபிடிப்புகள்தான் இன்றைய உடனடித் தேவை.

வாழ்க அறிவியல் அறிஞர்கள் . வளரட்டும் நவீன மருத்துவம் . வெல்லட்டும் நம்

மனிதகுல சந்ததிகள்.

தனித்திரு!

விழித்திரு!

எச்சரிக்கையாய் இரு!

சுத்தமாய் இரு மனித வர்க்கமே...!

corona virus
இதையும் படியுங்கள்
Subscribe