ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025இன் இறுதிப்போட்டி இன்று (02-11-25) மும்பையில் நடைபெற்றது. அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதியது. 

Advertisment

இந்த இறுதிப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய மகளிர் அணி பேட்டிங் செய்வதற்காக மைதானத்தில் களமிறங்கினர். முதலில் பேட்டிங் செய்த ஸ்மிருதி மந்தனா, 58 பந்துக்கு 8 பவுண்டரிகள் அடித்து 45 ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்ததாக ஷஃபாலி வர்மா, 78 பந்துக்கு 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடித்து 87 குவித்து அணிக்கு வலுசேர்த்தார். அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனியாக 127 குவித்து இந்திய அணியை வெற்றி பெற செய்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், இந்த போட்டியில், வெறும் 27 ரன்கள் எடுத்து மட்டுமே அவுட்டானார். 

Advertisment

அதன் பின்னர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 20 ரன்களும், அமன்ஜோத் கவுர் 12 ரன்களும் அடுத்தடுத்து அவுட்டாகினர். தீப்தி ஷர்மா 58 பந்துகளுக்கு 3 பவுண்டரிகள் 1 சிக்சர்கள் அடித்து 58 ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியாக, இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தனர். 

298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது. அதன்படி தென்னாப்பிரிக்கா அணியின் கேப்ட லாரா வால்வார்ட் 101 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடினார். அவர் அவுட் ஆனவுடன் அடுத்ததாக களமிறங்கிய டாஸ்மின் பிரிட்ஸ், சுனே லூஸ், சினாலோ ஜாஃப்டா, அன்னெரி டெர்க்சன் ஆகியோர் சொற்ப ரன்களை மட்டுமே அடுத்தடுத்து அவுட்டாகினர். இறுதியாக 45.3 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்தாண்டுக்கான ஐசிசி உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய மகளிர் அணி வென்றுள்ளது. இதன் மூலம் வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற சாதனையை இந்திய மகளிர் அணி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். மேலும், நாடு முழுவதும் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். 

Advertisment