ICC releases list for t20 World Cup match to be held in Chennai
கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறும் இடங்களை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி மார்ச் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில், குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் இடம் பெற்று விளையாடவுள்ளன. 20 அணிகள் கலந்துகொள்ளும் டி-20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் அமெரிக்கா, பாகிஸ்தான், நெதர்லாந்து, நபிமியா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இதில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தை, பிப்ரவரி 7ஆம் தேதி அமெரிக்கா அணியுடன் மோதவிருக்கிறது.
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடக்கும் உலகக் கோப்பை டி20 தொடர் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிப்ரவரி 8ஆம் தேதி நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவிருக்கின்றன. இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us