Advertisment

அமீபா வைரஸ் ஆபத்தானதா? - எளிமையாக விளக்கும் பிரபல மருத்துவர்!

1

தமிழ்நாட்டில் அமீபா வைரஸ் காய்ச்சலால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை என சமீபத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி தெரிவித்தார். கேரளாவில் அமீபா வைரஸ் பரவிவருகிறது. அதனால் தமிழக மக்களும் கவனத்துடன் இருக்கவேண்டும் என எச்சரிக்கை செய்துள்ளார். அமீபா வைரஸ் காய்ச்சல் என்றால் என்ன? இது எப்படி பரவுகிறது? இக்காய்ச்சல் வருவது எப்படி? இதனை தடுக்க என்ன வழி? இந்நோயை குணப்படுத்த மருந்துகள் உள்ளனவா என்பது குறித்து பிரபல மருத்துவர் ரம்யா அய்யாதுரை அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம்.

அமீபா மூளை காய்ச்சல் என்றால் என்ன?

Advertisment

அமீபா சுயமாக வாழக்கூடிய நுண்ணுயிர் ஆகும். இந்த நுண்ணுயிர் மனிதர்களில் மூளை தொற்று காய்ச்சல் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அதனாலயே அமீபா வைரஸ் உருவாக்கும் காய்ச்சல் மூளையை பாதிக்கும் என்பதால் அமீபா மூளை காய்ச்சல் என கூறப்படுகிறது.

 அமீபா தொற்று மனிதர்களில் எப்படி ஏற்படுகிறது?

அமீபா நன்னீர் தேக்கங்களான ஏரி, குளம் மற்றும் தேங்கிய நதி நீரில் வசிக்கின்றன. அதாவது ஆறுபோல் ஓடாமல் ஒரேயிடத்தில் தேங்கி நிற்கும் நன்னீரில் அமீபா வைரஸ்கள் அதிகளவு இருக்கும். இந்த நீரில் மனிதர்கள் குளிக்கும் போது, தலை முக்கி குளித்து எழும்போது அந்த தண்ணீர் நமது மூக்கு நாசி வழியாக மூளையை அடைகிறது. அது மூளை காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. இப்படித்தான் அக்காய்ச்சல் மனிதர்களுக்கு வருகிறது.

 அமீபா முறை காய்ச்சல் அறிகுறிகள் என்ன?

ஏரி குளங்களில அல்லது தேங்கிய ஓடை மற்றும் நதி நீரில குளித்த 1- 9 நாட்களுக்குள் தீவிரமான தலைவலி , வாந்தி, அதிகப்படியான கண் கூச்சம், மன நிலை மாற்றம், நினைவு குறைதல், வலிப்பு போன்றவை வந்தால் அது இந்நோயின் அறிகுறிகளாகும். சிலருக்கு உண்ணும் உணவில் ருசி இருக்காது, மூக்கு வாசனை தெரியாது. இந்த அறிகுறிகள் இருந்தால் அது அமீபா காய்ச்சலின் அறிகுறிகள்.

 இந்த வகையான மூளை காய்ச்சலை தடுப்பது எப்படி?

Advertisment

குளம், குட்டை ஏரிகளில் நீந்தும் போது நீரின் வெளியே தலை இருக்க வேண்டும். நீரில் முங்கும்போது மூக்கினுள் நீர் நுழையாமல் இருக்க மூக்கு கிளிப்புகள் பயன்படுத்தி குளியுங்கள். கிளோரின் உபயோகபடுத்தி சுத்தப்படுத்தப்படாத நீரில் முக்கி குளிப்பதை முழுமையாக தவிர்த்து விடவேண்டும்.

அமீபா மூளை காய்ச்சலை எப்படி கண்டுபிடிப்பது?

முதுகு தண்டில் இருந்து நீர் எடுத்து அதனை உயர் நிபுணத்துவம் உள்ள ஆய்வகங்களில் தேர்ந்த நிபுணர்களால் பரிசோதனை செய்தால்  மட்டுமே இந்த நோய்யை கண்டுபிடிக்க முடியும்.

அமீபா மூளை காய்ச்சலுக்கு ஆற்றல் மிக்க மருந்துகள் உள்ளனவா?

இந்நோய் மிகவும் வீரியமான நோய். இதனை முறியடிக்க மருந்துகள் இல்லை உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் அமீபா மூளை காய்ச்சல் ஏற்பட்டால். உயிர் பிழைக்கும் வாய்ப்பு 3% மட்டுமே. எனவே வருமுன் காப்பதே இந்த நோய்க்கு சரியான தீர்வு

இந்த வகையான மூளை காய்ச்சல் தமிழ் நாட்டிலும் இருக்க வாய்ப்பு உள்ளதா?

உலகின் எந்த பகுதியிலும் அண்டார்டிகா கண்டம் தவிர அமீபா மூளை காய்ச்சல் ஏற்படுலாம் அதனால் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

Doctor virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe