உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடரின் 2026ஆம் ஆண்டுக்கான 19வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎஸ் போட்டிக்கான மெகா ஏலம், விரைவில் நடைபெற உள்ளது.

Advertisment

இத்தகைய சூழலில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா, ராஜஸ்தான் அணிக்கு மாறவுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. அதாவது ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு அளித்துவிட்டு, அதற்கு பதிலாக ராஜஸ்தான் அணியின் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சனை வாங்க சி.எஸ்.கே. நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

Advertisment

சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பரான தோனி, தொடர்ந்து விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்து வரும் நிலையில், ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு விடுவித்து அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களான ரச்சின் ரவீந்திரா, விஜய் சங்கர், ராகுல் திரிபாதி மற்றும் மதீஷா பத்திரானா ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்துள்ளது. அவர்களுக்கு பதிலாக மற்ற அணியில் இருந்து வேறு வீரர்களை வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சி.எஸ்.கே அணியின் நட்சத்திர வீரர்களான பலரையும் அணியில் இருந்து விடுவித்து வருவது, சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment