CSK plans to exchange players with Rajasthan Royals
உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. மாநிலங்களை முன்னிலைப்படுத்தி அணிகளை பிரித்து விளையாடப்படும் இந்த ஐபிஎல் போட்டிக்கு, உலகம் முழுவதும் அதிக ரசிகர்கள் உள்ளனர். உலகிலேயே அதிக பார்வையாளர்களை கொண்ட இந்த ஐபிஎல் போட்டி, 18 சீசன்களோடு கடந்த 18 வருடமாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில், 2026ஆண்டுக்காக 19வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரலில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎஸ் போட்டிக்கான மெகா ஏலம், விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்திற்கு முன்பாக, ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா, ராஜஸ்தான் அணிக்கு மாறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு அளித்துவிட்டு, அதற்கு பதிலாக ராஜஸ்தான் அணியின் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சனை வாங்க சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பரான தோனி, தொடர்ந்து விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்து வரும் நிலையில், அவரது இடத்தில் சஞ்சு சாம்சனை சேர்க்க சிஎஸ்கே அணி நிர்வாகம் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், சிஎஸ்கே அணி ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
Follow Us