இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், நட்சத்திர வீரருமான ஸ்மிருதி மந்தனாவுக்கு நடக்கவிருந்த திருமணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்திய கிரிக்கெட் மகளிர் அணிக்கு முக்கிய பங்கு வகித்து வரும் ஸ்மிருதி மந்தனா, இந்தியாவின் முகமாக பார்க்கப்படுகிறார். இவர்  2 முறை சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இவரும், பிரபல இந்தி இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் என்பவரும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர்.

Advertisment

சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று இன்று (23-11-25) திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று திருமணம் ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, உடனடியாக அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதனால், ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment