வர்த்தக உலகில் மிகவும் பிரபல நிறுவனங்களில் ஒன்றான கோல்கேட் இந்தியாவில் வீழ்ச்சியை நோக்கியுள்ளது.

Advertisment

வில்லியம் கோல்கேட் என்பவரால் 1806 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு சிறிய சோப்பு மற்றும் மெழுகுவர்த்தி தயாரிப்புத் தொழிற்சாலையாகத் தொடங்கப்பட்டது தான் கோல்கேட் நிறுவனம். நாளடைவில் படிப்படியாக வளர்ந்தது. சோப்பு தயாரிப்பின் நீட்சியாக 1873 ஆம் ஆண்டு கோல்கேட் தனது முதல் வாசனை கொண்ட பற்பொடியை அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து 1953 ஆம் ஆண்டு நிறுவனத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக 'கோல்கேட்-பாமோலிவ்' என்று மாற்றப்பட்டது. 1968 ஆம் ஆண்டுவாக்கில்  ஃப்ளோரைடு பற்பசை தயாரிப்பை கோல்கேட்  அறிமுகப்படுத்தியது.

Advertisment

09
Colgate is collapsing - what did it do wrong? Photograph: (colgate)

பற்பொடி தயாரித்த காலத்திலேயே இந்திய சந்தையில் கால் பதித்த கோல்கேட், டிவி விளம்பரங்கள் மூலம் பின்னாளில் அடித்தட்டு மக்கள் வரை சென்று சேர்ந்தது. உலகளவில்  தவிர்க்க முடியாத பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றாக கோல்கேட் உருவானது. போட்டி நிறுவனங்கள் பல இருந்தும் 'கோல்கேட்' பற்பசை கோலோச்சியே இருந்தது. ஆனால் கடந்த மூன்று காலாண்டுகளாக இந்தியாவில் இறக்கம் கண்டு வந்த 'கோல்கேட்' விற்பனை நடப்பாண்டில் உச்சபட்ச சரிவை சந்தித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 'கோல்கேட்' விற்பனை 54 சதவிகிதமாக இருந்த நிலையில் தற்போது 42 சதவீதமாக குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காரணமாக இந்தியாவில் ஜிஎஸ்டியில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் தேவை குறைந்திருப்பது என பல்வேறு காரணிகளை அந்த நிறுவனத்தின் சிஇஓ நோயல் வாலால் தெரிவித்துள்ளார். அதேபோல விநியோக சங்கிலியில் ஏற்பட்ட சிக்கலும், தவறுகளும் தான் மற்றொரு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம் பதஞ்சலி, டாபர் ரெட் உள்ளிட்ட இயற்கை மூலக்கூறுகள் கொண்ட படைப்புகள் என பற்பசைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் கோல்கேட்டின் சந்தை இடத்தை பிடிக்கும் கோதாவில் இறங்கியுள்ளன.

Advertisment