தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடும் வைஃப் வித் எம்.கே.எஸ். (Vibe With MKS) என்ற நிகழ்ச்சி அவரது சமூக வலைத்தளத்தில் நேற்று (24.12.225) வெளியாகியிருந்தது. அதில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் தலைமைப் பண்பும் (கேப்டன் ஷிப்), பொறுமையுடன் சூழலைக் கையாளும் திறனும் எனக்கு மிகவும் பிடிக்கும் என  அவர் தெரிவித்துள்ளார். 

Advertisment

மேலும், “நான் ஒரு ஆஃப் ஸ்பின்னர். கலைஞர் கிரிக்கெட் விளையாட நான் பந்து வீசியிருக்கிறேன். மாணவர்களும், இளைஞர்களும் செல்போன் பயன்படுத்துவதைக் குறைத்து, விளையாட்டு போன்ற துறைகளில் சாதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் விளையாட்டு வீரர் ஒருவர், “உங்களுக்கு தோனி  கிட்ட பிடித்த குவாலிட்டி என்ன? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், தோனியின் கேப்டன்ஷிப் ரொம்ப பிடிக்கும்.

Advertisment

 காரணம் ரொம்ப ஸ்மைலா, ஸ்வீட்டா, ஸ்மார்ட்டா, சைலண்ட்டா, எந்தவித டென்ஷனும் ஆகாமல் அவர் கேப்டன்ஷிப் பண்றார் அது ரொம்ப பிடிக்கும். ஒரு பெரிய வழிகாட்டியாக இருக்கிறார். இவ்வளவு வயது கடந்து போனாலும் இன்னும் அவர் விளையாட வேண்டும் என்று சில ரசிகர்கள் ஆரவத்தோடு காத்துக்கொண்டு இருக்கிறார்கள் பாருங்கள். அதுதான் காரணம் ”எனத் தெரிவித்தார்.