இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் 2026 தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் மினி ஏலமும் டிசம்பர் 2025-ல் நடைபெற்றது. இந்த ஏலத்தில் கொல்கத்தா அணி, வெளிநாட்டு வீரரான முஸ்தாபிசுர் ரஹ்மானை 9.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. சில தினங்களுக்கு முன்பு அந்த வீரரை விடுவிக்கும்படி பிபிசிஐ நிர்வாகம் கொல்கத்தா அணிக்கு உத்தரவிட்டது. அந்த வீரருக்கு பதிலாக மாற்று வீரரை ஒப்பந்தம் செய்துகொள்ளவும் அனுமதியளிக்கப்டும் எனவும் பிசிசிஇ தெரிவித்திருந்தது.
வேகப்பந்து வீச்சாளரான முஸ்தாபிசுர் ரஹ்மான் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர். இவர் கொல்கத்தா அணியிலிருந்து நீக்கியது, வங்கதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முஸ்தாபிசுர் ரஹ்மானை ஐபிஎல் போட்டியிலிருந்து நீக்கியத்தைத் தொடர்ந்து, வங்கதேச அரசு ஐபிஎல்-ஐ ஒளிபரப்ப மற்றும் அது சம்பந்தமான விளம்பரங்களுக்கு தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட ஓர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ஐபிஎல் தொடர்பான அனைத்து ஒளிபரப்புகள், விளம்பரங்கள் மற்றும் நிகழ்வுச் செய்திகள் அனைத்தும் காலவரையின்றி தடை செய்யப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை தொடரும் என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த முடிவு பொது நலன் கருதி எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம், ரஹ்மானை நீக்கிய இந்த முடிவுக்கு எந்தவொரு தர்க்கரீதியான காரணமும் இல்லை, மேலும் இந்த முடிவு வங்கதேச மக்களை மன உளைச்சலுக்கும், அதிர்ச்சிக்கும், கோபத்திற்கும் ஆளாக்கியுள்ளது, என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வங்கதேச அரசின் இந்த முடிவு வங்கதேச மக்களின் உணர்வின் பிரதிபலிப்பாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பிசிபி இயக்குநர் காலித் மசூத் பைலட், ‘எங்கள் வீரர்களில் ஒருவருக்கே அவர்களால் பாதுகாப்பு வழங்க முடியாவிட்டால், எங்கள் முழு அணிக்கும் அவர்கள் எப்படி பாதுகாப்பை உறுதி செய்வார்கள்? அதனால், வருகின்ற டி20 உலக கோப்பைப் போட்டிக்கு எங்கள் வீரர்களை இந்தியாவிற்கு விளையாட அனுப்பமாட்டோம்’ என்று ரஹ்மான் நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/06/rah-2026-01-06-12-58-18.jpg)