கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஆணி மாதத்தில் ஆனித்திருமஞ்சன தேர் மற்றும் தரிசன விழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா நடைபெறுவது வழக்கமாகும்.இந்த ஆண்டிற்கான ஆருத்ரா தரிசன விழா கடந்த மாதம் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கோவிலில் சாமி சிலைகள் வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடைபெற்றது இந்த நிலையில் ஜனவரி 2ஆம் தேதி தேர்த் திருவிழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலை மகா அபிஷேகம் இதில் இதுவரை இல்லாத அளவிற்குப் பெருமளவில் பக்தர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாலை ஐந்து மணிக்கு மேல் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது இதில் தமிழக மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வழக்கமாக மதியம் 2 மணிக்குள் நடக்க வேண்டிய தரிசன விழாவைத் தீட்சிதர்கள் திருவிழாவிற்கு அதிகமான கட்டளைதாரர்கள் வருகை தந்ததால் 3 மணி நேரத்திற்கு மேலாகப் பொதுமக்கள் மற்றும் பக்தர்களைக் காத்திருக்க வைத்து தாமதமாக நடத்தியுள்ளனர்.
தரிசன விழாவில் கலந்து கொண்ட முதியவர்கள் மற்றும் சிவ பக்தர்கள் சர்க்கரை நோய் உள்ளவர்கள் விரதத்துடன் காலையிலே கோவிலுக்குத் தரிசனத்தைப் பார்ப்பதற்காக உள்ளே வந்தனர். இதில் சிலர் இந்த தரிசனத்தைப் பார்த்த பிறகு தான் உணவு அருந்துவார்கள் ஆனால் தரிசன விழா காலதாமதமாக நடத்தியதால் மிகவும் சிரமம் அடைந்தனர் அவர்கள் கூட்ட நெரிசலில் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அனைவரும் வேதனை அடைந்ததாகக் கூறுகின்றனர்.
Follow Us