Advertisment

வீட்டின் வடகிழக்கில் படிக்கட்டு இருப்பது சிறப்பல்ல ஏன்?

பூமியில் வாழும் ஒவ்வொருவரும் நல்ல உடல்நலத்துடன் நீண்டகாலம் வாழவேண்டுமென்று ஆசைப்படுவார்கள்.சிலர் நடுத்தர வயதிலேயே இம்மண்ணைவிட்டு நீங்கிவிடுகிறார்கள். அதன் காரணமாக அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், உறவினர்களும் தாங்கமுடியாத கவலையில் மூழ்கிவிடுகிறார்கள். ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருந்தால், அவர் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் இருப்பார். அதேபோல ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பலமாக இருந்து, சந்திரன் சுய வீட்டிலோ, உச்சமாகவோ இருந்தால், அவர் நீண்ட ஆயுளுடன் இருப்பார்.

Advertisment

hanuman

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியை குரு பார்த்தால் அந்த ஜாதகர் நீண்ட ஆயுளுடன் வாழ்வார். ஜாதகத்தில் குரு பகவான் சுய வீட்டிலோ, உச்சமாகவோ இருந்து, லக்னாதிபதியையும் சந்திரனையும் பார்த்தால் ஜாதகர் நீண்ட ஆயுளுடன் இருப்பார். ஜாதகத்தில் சனி பகவான் 8-ல் இருந்து, லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால், அந்த மனிதர் நீண்டகாலம் வாழ்வார். லக்னாதிபதி பலவீனமாக இருந்து, அந்த ஜாதகத்தில் 6-ஆம் அதிபதி கெட்டுப்போயிருந்தால் அவருடைய ஆயுள் நீளுமேதவிர, நோய் இருந்துகொண்டே இருக்கும். ஏதாவது பிரச்சினைகள் தொடர்கதையாகும். ஜாதகத்தில் லக்னாதிபதியும் சந்திரனும் பலவீனமாக இருந்தால், அவருக்கு பூரண ஆயுள் இருக்கும். எனினும், வாழ்வில் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் இருப்பார். அவருக்கு முக்கியமான நேரங்களில் நோயின் பாதிப்பு உண்டாகும். மனதில் எப்போதும் பயமிருக்கும். அதன்காரணமாக மனநோய் உண்டாகும்.

Advertisment

hanuman

ஒரு ஜாதகத்தில் செவ்வாய், சனி, லக்னாதிபதியுடன் சேர்ந்து லக்னத்தில் இருந்தால் அவர் விபத்துக்களைச் சந்திப்பார். அதனால் நோய்களால் பாதிக்கப்படுவார். கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவனுக்கும் பிரச்சினைகள் ஏற்படும். ஒரு ஜாதகத்தில் செவ்வாய், சூரியன், சனி அல்லது சூரியன், சனி, ராகு 12-ல் இருந்தால், சிலருக்கு பித்ருதோஷம் உண்டாகும். அதனால் வீட்டில் பல பிரச்சினைகள் உண்டாகும். வாழ்க்கையில் அவரால் சந்தோஷத்தை அனுபவிக்கமுடியாது. ஒரு ஜாதகத்தில் 6-ல் சனி உச்சமாக இருந்து செவ்வாய் சேர்ந்திருந்தாலும் அல்லது 7-ல் சனி, கேது இருந்தாலும் அந்த ஜாதகருக்கு உடல்நல பாதிப்பு இருக்கும். எப்போதும் மனக்கவலையுடன் இருப்பார். அவரால் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="1282094959"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ஒரு ஜாதகத்தில் சந்திரன், சனியுடன் 6, 8, 12-ல் இருந்தால், அவருக்கு விஷயோகம் உண்டாகும். அதன்காரணமாக தீராத நோய் வந்துசேரும். பல பிரச்சினைகளிலும் சிக்கி அவர் வாழ்ந்துகொண்டிருப்பார். ஒரு வீட்டின் தென்மேற்கு திசையில் கிணறு அல்லது ஆழ்துளைக்கிணறு இருந்தால், அந்த வீட்டில் இருப்பவரின் ஆயுளில் குறை ஏற்படும். ஒரு வீட்டின் தெற்கு மத்தியில் அல்லது தென்கிழக்கில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருந்தால், அங்கிருப்பவருக்கு சிறிதும் எதிர்பாராமல் ஏதாவது விபத்து ஏற்படும். அதனால் அவரால் சநதோஷமாக வாழமுடியாத நிலை உண்டாகும்.

பரிகாரங்கள்

தினமும் சிவனை வழிபடவேண்டும். பால், நீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யவேண்டும். தினமும் மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தைக் கூறிவருதல் நலம். கருப்புநிற ஆடையைத் தவிர்க்கவும்.வீட்டின் தென்மேற்கில் நீர்த்தொட்டி அல்லது கிணறு பூமிக்கு அடியில் இருக்கக்கூடாது. வீட்டின் தென்கிழக்கில் நீர் பிடித்து வைக்கக்கூடாது. கிணறு அல்லது ஆழ்துளைக்கிணறு அப்பகுதியில் இருப்பது நல்லதல்ல. வீட்டின் தென்மேற்கில் சமையலறை இருந்தால் அதை அக்னிமூலைக்கு மாற்றவும்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="1282094959"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

வீட்டின் வடகிழக்கில் படிக்கட்டு இருப்பது சிறப்பல்ல. வீட்டிற்குத் தென்கிழக்கு வாசல் இருக்கக்கூடாது. லக்னாதிபதியின் ரத்தினத்தை அணியலாம். சனிக்கிழமைகளில் ஆஞ்சனேயர் ஆலயத்திற்குச் சென்று, அவரின் காலில் இருக்கும் குங்குமத்தை எடுத்துவந்து, வீட்டின் கதவில் ஸ்வஸ்திக் வடிவத்தை வரைந்துவைத்தல் நல்லது.

horoscope worship SPIRITUAL aanmeegam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe