Advertisment

கருப்பு ஆடையைத் தவிர்க்கவும்... ஏன் ?

ஆண்- பெண் இருபாலரும் வேலை பார்த்தால்தான் சிரமமின்றி குடும்பத்தை நடத்தமுடியும் என்ற சூழல் பலருக்கு உள்ளது.ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமையுடன் இருந்தால் அந்த ஜாதகருக்கு நல்ல வேலை கிடைக்கும். இரண்டாம் பாவமும் வலிமையுடன் இருந்தால் அல்லது 2-க்கு அதிபதி உச்சத்தில் இருந்தால் நல்ல வேலை கிடைக்கும்.ஒருவரின் ஜாதகத்தில் 5-க்குரிய கிரகம் 5-ல் அல்லது உச்சமாக இருந்தால் ஜாதகர் பெரிய வெற்றிகளைச் சந்திப்பார். புகழுடன் இருப்பார்.10-ல் சூரியன் அல்லது 10-க்கு அதிபதி சூரியனுடன் இருந்தால், அவருக்கு அரசுத்துறையில் நல்ல வேலை கிடைக்கும். 5-க்கு அதிபதி 9-க்கு அதிபதியுடன் 9 அல்லது 10 அல்லது 11-ல் இருந்தால் அவருக்கு நல்ல வேலை கிடைக்கும். அதன்மூலம் புகழும் கிடைக்கும்.ஒரு ஜாதகத்தில் 5-ல் புதன், குரு, சூரியன் இருந்தால் நல்ல வேலை, பதவி உயர்வு கிடைக்கும். லக்னத்தில் ராகு, 5-ல் குரு, 10-ல் சூரியன் இருந்தாலும் நல்ல வேலை கிடைக்கும். புகழுடன் வாழ்வார்.ஒரு ஜாதகத்தில் சந்திரனிலிருந்து 4 அல்லது 7 அல்லது 10-ல் குரு இருந்து, லக்னாதிபதி பலமாக இருந்தால் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் லக்னாதிபதி இருந்து, 6-ல் சனி, 10-ல் சூரியன் இருந்தால், அவருக்கு நல்ல வேலை கிடைக்கும். நாளாக... நாளாக... புகழுடன் விளங்குவார்.ஒரு ஜாதகத்தில் 6-ல் குரு, புதன், சூரியன் இருந்தால் அந்த ஜாதகர் தூர இடத்தில் நல்ல வேலையில் இருப்பார். புகழும் கிடைக்கும். லக்னத்தில் சுக்கிரன், 3-ல் குரு இருந்தால், அவர் அதிகம் அலைச்சலுள்ள வேலையில் இருப்பார். ஆனால் அதில் நல்ல வருமானம் கிடைக்கும்.

Advertisment

thirunallar saneeswara temple

லக்னத்தில் செவ்வாய், 5-ல் குரு, 9-ல் சந்திரன் இருந்து நல்ல தசை நடந்தால், அவருக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒருவருக்கு 9-ஆம் அதிபதியின் தசை நடந்தால் நல்ல பணி கிடைக்கும்.லக்னாதிபதி வலுவாக இருந்து 2-ஆவது பாவத்தின் தசை நடக்கும் போது நல்ல வேலை கிடைக்கும்.ஒருவருக்கு ஏழரைச்சனி நடக்கும்போது வேலை கிடைப்பதில் தடைகள் உண்டாகும்.ஒருவர் வேலைதேடும் நேரத்தில் அஷ்டமச்சனி நடந்தால் நீண்ட அலைச்சலுக்குப் பிறகுதான் வேலை கிடைக்கும். 8-ஆம் அதிபதியின் தசை நடக்கும்போது வேலை தேடினால் அதிக அலைச்சல்களுக்குப் பிறகுதான் கிடைக்கும்.ஒரு ஜாதகருக்கு கோட்சாரத்தில் குரு 12-ல் உலவும்போது அவர் வேலைக்காக நிறைய அலைய வேண்டியதிருக்கும். ஒருவருக்கு கோட்சாரத்தில் 3-ல் குரு இருந்தால், வேலைதேடும் நேரத்தில் அவரைப் பலரும் தாழ்த்திப் பேசுவார்கள்.ஒருவருக்கு அஷ்டமத்தில் குரு இருந்தால், அவர் தன் தகுதிக்கும் கீழான வேலையைப் பார்க்க வேண்டியதிருக்கும். கோட்சாரத்தில் 4-ல் சனி இருந்தால் வேலைக்காக அலைய வேண்டியதிருக்கும். சரியான இடத்தில் வேலை கிடைக்காது. கிடைக்கக்கூடிய வேலையைச் செய்ய நேரும்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ஜாதகத்தில் செவ்வாயும் சந்திரனும் பலவீனமாக இருந்தால், கிடைப்பதாக இருந்த வேலை இறுதி நேரத்தில் கைநழுவிப்போய்விடும். சூரியன், செவ்வாய், ராகு 6, 8, 12-ல் இருந்தால், கோப குணத்தால் வேலைவாய்ப்பை இழந்து விடுவார்.ஒரு ஜாதகத்தில் சூரியன், ராகு, சனி 10-ல் இருந்தால், வேலை தேடுவதில் பிரச்சினை ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சினை இருக்கும். ஆனால், 36 வயதிற்குப் பிறகு அவர் நல்ல வெற்றியைப் பெறுவார்.குரு, புதன், சுக்கிரன், செவ்வாய் 5-ல் இருந்தால், நல்ல அரசு வேலை கிடைக்கும். லக்னத்தில் சூரியன், 9-ல் குரு இருந்தால், அவர் படிப்படியாக நல்ல பதவியில் அமர்வார். லக்னத்தில் சந்திரன், 5-ல் குரு, 9-ல் சூரியன் இருந்தால், அவர் காலப்போக்கில் சிறப்பான பதவியில் இருப்பார்.

பரிகாரங்கள்

1.தினமும் காலையில் குளித்து முடித்து சூரிய பகவானுக்குரிய ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தைப் படிக்க வேண்டும்.

2.தெற்கில் அல்லது கிழக்கில் தலைவைத்துப் படுப்பது நல்லது. லக்னாதிபதியின் ரத்தினத்தை அணியவேண்டும்.

3.வாரத்தில் திங்கட்கிழமையிலிருந்து சனிக்கிழமைவரை அரசமரத்தைச் சுற்றி வந்து வழிபடுவது சிறந்தது.

4.வீட்டில் தேவையற்ற குப்பைகளை அகற்றிவிடவேண்டும்.

5.வெள்ளிக்கிழமை இரவில் துர்க்கைக்கு விளக்கேற்றி சிவப்பு மலர்களால் வழிபட வேண்டும்.

6.ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானமளிக்க வேண்டும்.

7.கறுப்பு நிற ஆடையைத் தவிர்க்கவும்.

8.நேர்காணலுக்குச் செல்லும்போது, வெளிர் நிற ஆடைகளையே அணிந்துசெல்ல வேண்டும்.

மேற்கண்டவற்றைக் கடைப்பிடித்தால் நல்ல வேலைவாய்ப்பைப் பெறலாம்.

SPIRITUAL aanmeegam temple horoscope
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe