Advertisment

பெண் மோகத்தால் பறிபோகிறதா செல்வம்?

பல ஆண்கள் பெண்களிடம் ஏமாந்து பணம், சொத்து ஆகியவற்றை இழந்துவிடுகிறார்கள். அவர்களுடைய இந்த நிலைமைக்கு ஜோதிடரீதியான காரணம் என்ன?

Advertisment

ஒரு ஆண் ஜாதகத்தில் அவர் பெண்களிடம் பணத்தை இழந்துவிடுவார் என்ற நிலைமை இருந்தால், அதற்குக் காரணம்- அந்த ஜாதகரின் 2-ஆம் பாவமும் சுக்கிரனும்தான். ஒரு ஆண் ஜாதகத்தில் 2-ஆம் பாவத்தில் சனி, புதன் இருந்து சந்திரன் நீசமாக இருந்தால், அந்த ஆண் 25 வயதிற்குப்பிறகு பல பெண்களுடன் பழகி அவர்களிடம் ஏமாந்துவிடுவார். அவர்கள் அவரிடமிருந்து சொத்துகளை அபகரித்து விடுவார்கள். ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன், 2-ல் சனி, 4-ல் சந்திரன், 6 அல்லது 12-ல் சுக்கிரன் இருந்தால் அவர் பல பெண்களிடம் ஏமாறுவார்; பணத்தை இழப்பார்.

Advertisment

vaasthu image

லக்னத்தில் சூரியன், சுக்கிரன், 12-ல் செவ்வாய், புதன் இருந்து, ஜாதகர் கலைத்துறையில் உள்ளவராக இருந்தால், அங்கு பணியாற்றும் பெண்கள்மீது மோகம் கொண்டு, செவ்வாய்- புதன் சேர்க்கை காரணமாக, பல பெண்களிடம் அவர் ஏமாறுவார். தன் முக்கிய வேலைகளைக்கூட செய்யமாட்டார். அவரின் சொத்து கையைவிட்டுப் போய்விடும். ஒரு ஜாதகத்தில் 12-ல் சந்திரன், 4-ல் சுக்கிரன், கேது, 7-ல் செவ்வாய் இருந்தால், அவர் பல பெண் களுடன் பழகி தன் சொத்துகளை இழந்துவிடுவார். ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் சுக்கிரன், கேது, 7-ல் சனி, ராகு இருந்தால், அவர் தன் நெருங்கிய உறவுப் பெண்ணிடம் ஏமாந்து, பணத்தை இழப்பார்.

vaasthu image

ஒரு ஆண் ஜாதகத்தில் 2-ஆம் பாவத்தில் சுக்கிரன்- செவ்வாய், 7-ல் சனி இருந்தால், அவரை பல பெண்கள் ஏமாற்றிவிடுவார்கள். லக்னத்தில் சுக்கிரன், செவ்வாய், 4-ல் சனி, 7-ல் சந்திரன் இருந்தால், அவர் தன் திருமணத்திற்கு முன்பே பெண்களிடம் பழகி சொத்துகளை இழப்பார். லக்னத்தில் புதன், சுக்கிரன், 2-ல் ராகு, 4-ல் சனி, 12-ல் செவ்வாய் அல்லது சூரியன், செவ்வாய் இருந் தால், அவர் தன் இளம்வயதிலேயே பல பெண்களுடன் பழகி அவர் களிடம் ஏமாந்து சொத்துகளை இழந்துவிடுவார். 36 வயதிற்குப் பிறகுதான் அவர் நிம்மதியாக இருப்பார். லக்னத்தில் நீசச் செவ்வாய், 2-ல் சனி, 3-ல் நீச சுக்கிரன் ராகுவுடன் இருந்தால், அவர் பல பெண்களுடன் பழகி பணத்தை இழப்பார். அவருடைய சொத்துகளைப் பெண்கள் அபகரித்து விடுவார்கள்.

vaasthu image

லக்னத்தில் நீச சூரியன், புதன், 6-ல் சந்திரன், 10-ல் செவ்வாய், 12-ல் சுக்கிரன் இருந்தால், அவர் தேவையற்ற கற்பனை களில் மிதப்பார். மோசமான பெண் களுடன் பழகி சொத்துகளை இழப்பார்.v ஒரு ஆண் ஜாதகத்தில் 6-ஆவது பாவத்தில் செவ்வாய், புதன், கேது, சுக்கிரன் அல்லது செவ் வாய், சுக்கிரன், புதன், சூரியன் இருந்தால் அவர் தன் தகுதியைவிட கீழ்நிலையிலுள்ள பெண் களுடன் பழகி சொத்துகளை இழப்பார். 7-ல் சனி, 12-ல் சுக்கிரன், புதன், செவ்வாய் இருந்து அவர் வசிக்கும் வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தாலும், வீட்டின் பிரதான வாசல் மேற்கு திசை சார்ந்த தென்மேற்கில் இருந்து, படுக்கையறை வடகிழக்கில் இருந்து அதன் வாசல் தென்மேற்கில் இருந்தாலும் அவர் பெண் மோகத்தால் பெரிய அளவில் சொத்துகளை இழந்துவிடுவார். லக்னத்தில் சூரியன், செவ்வாய், புதன் இருந்து சுக்கிரன், ராகு சேர்ந்து 3, 6, 12-ல் இருந்தால், அவர் பெண் மோகத்தால் சொத்துகளை இழப்பார். அவமானத்திற்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்படும்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

பரிகாரங்கள்

வீட்டின் பிரதான வாசல் தென்மேற் கிலோ மேற்கு சார்ந்த தெற்கிலோ இருக் கக்கூடாது. படுக்கையறையில் தென்மேற்கு வாசல் இருக்கக்கூடாது.

தினமும் ஆஞ்சனேயரை நான்குமுறை சுற்றிவந்து வழிபடுவது நல்ல பரிகாரம்.

அரசமரத்திற்கு நீர் வார்க்கவேண்டும். திங்கள் முதல் சனிக்கிழமைவரை அரசமரத்திற்கு தீபமேற்றவேண்டும்.

வெள்ளிக்கிழமை துர்க்கை ஆலயத்தில் தீபமேற்றி வழிபடவேண்டும்.

லக்னாதிபதி, 5-க்குரிய கிரகத்தின் ரத்தி னத்தை அணியலாம்.

வீட்டில் வாஸ்து யந்திரம் வைத்துப் பூஜை செய்வது நற்பலன் தரும்.

worship SPIRITUAL horoscope aanmeegam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe