Skip to main content

இன்றைய ராசிபலன் 17.07.2018

Published on 17/07/2018 | Edited on 17/07/2018

கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

17-07-2018, ஆடி 01, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி மாலை 04.19 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. பூரம் நட்சத்திரம் காலை 09.27 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் காலை 09.27 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. கௌரி விரதம்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
 

meshamமேஷம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தந்து லாபம் பெருகும். பொன் பொருள் சேரும். வேலையில் பணிசுமை குறையும். சேமிப்பு உயரும்.
 

reshabamரிஷபம்

 இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும்.
 

 

 

3மிதுனம்

இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வேலையில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்பட்டு மன உளைச்சலை உண்டாக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக அனுகூலப்பலன் கிட்டும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.
 

kadagamகடகம்

இன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
 

5சிம்மம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனை குறையும். வியாபார ரீதியான பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். சுபகாரியம் கைகூடும்.
 

kannirasiகன்னி

இன்று உங்களுக்கு பொருளாதாரம் நிலை சிறப்பாக அமையும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.
 

thulamதுலாம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
 

viruchagamவிருச்சிகம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். உற்றார் உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.
 

danushதனுசு

இன்று குடும்பத்தில் பிள்ளைகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். வண்டி வாகனங்கள் பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். எடுத்த காரியம் வெற்றி அடைய மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் ஓரளவு குறையும்.
 

magaramமகரம்

இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு பகல் 3.07 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். மன அமைதி உண்டாகும்.

 

 

kumbamகும்பம்

இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 3.07 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் வேண்டும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.
 

meenamமீனம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் நிலவிய பிரச்சனைகள் விலகி மன நிம்மதி உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். வருமானம் பெருகும்.