ADVERTISEMENT

இன்றைய ராசிபலன் 14.06.2018

08:10 AM Jun 14, 2018 | Anonymous (not verified)

கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

ADVERTISEMENT


14-06-2018, வைகாசி 31, வியாழக்கிழமை, பிரதமை திதி இரவு 09.42 வரை பின்பு வளர்பிறை துதியை. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 02.04 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. கௌரி விரதம். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

ADVERTISEMENT

மேஷம்

இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்பு ஏற்படும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். சுபகாரியங்கள் கைகூடும்.

ரிஷபம்

இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.

கடகம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வம்பு வழக்கு போன்ற விஷயங்களில் சாதகமான பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

சிம்மம்

இன்று குடும்ப உறவுகளிடம் நல்ல ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சேமிப்பு உயரும். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

கன்னி

இன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சனைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த கடன் தொல்லைகள் நீங்கும்.

துலாம்

இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடம் மாற்று கருத்துக்கள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் சாதகமான பலன் உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லது.

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

தனுசு

இன்று குடும்பத்தில் பெண்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

மகரம்

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.

கும்பம்

இன்று பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் சற்று தாமத நிலை ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும்.

மீனம்

இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி கூடும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை எதிர்பாராத வகையில் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆலோசனையால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT