Skip to main content

இன்றைய ராசிபலன் - 24.03.2018

Published on 24/03/2018 | Edited on 24/03/2018

இன்றைய ராசிப்பலன் - 24.03.2018
கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

 

24-03-2018, பங்குனி 10, சனிக்கிழமை, சப்தமி திதி பகல் 10.06 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 03.42 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சனி ப்ரீதி நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
 

இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
 

meshamமேஷம்

இன்று வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான சிக்கல்களில் அனுகூலப்பலன் கிட்டும். உறவினர்கள் வழியாக மனமகிழும் செய்திகள் வந்து சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.

 

reshabamரிஷபம்

இன்று உங்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். எளிதில் முடிய கூடிய செயல்கள் கூட தாமதமாகும். வேலையில் சக ஊழியர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் கிடைப்பதற்கான சூழ்நிலை உருவாகும்.

 

3மிதுனம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும்.

 

kadagamகடகம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளால் மன அமைதி குறையும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை தரும். நெருங்கியவர்களின் உதவியால் பிரச்சினை தீரும்.

 

5சிம்மம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

 

kannirasiகன்னி

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.
 

thulamதுலாம்

இன்று உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி சுமூக உறவு உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். கடன் பிரச்சனைகள் தீரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

 

viruchagamவிருச்சிகம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனஉளைச்சல் உண்டாகலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. வேலையில் மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது உத்தமம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.
 

danushதனுசு

இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். நினைத்தது நடக்கும்.

 

magaramமகரம்

இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் எந்த வேலையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வெளி மாநிலத்தவர் நட்பு கிட்டும்.

 

kumbamகும்பம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து அமைதி நிலவும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனை கொடுக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் ஓரளவு குறையும்.

 

meenamமீனம்

இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். கடன்கள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்