Skip to main content

இன்றைய ராசிப்பலன் - 22.11.2019

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய  பஞ்சாங்கம்

22-11-2019, கார்த்திகை 06, வெள்ளிக்கிழமை, தசமி திதி காலை 09.01 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. உத்திரம் நட்சத்திரம் மாலை 04.41 வரை பின்பு அஸ்தம். சித்தயோகம் மாலை 04.41 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகள் செய்ய ஏற்ற நாள். இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00.

 

mesham

மேஷம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். 

 

reshabam

ரிஷபம்

இன்று குடும்பத்தில் அமைதி குறையலாம். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பணப்பிரச்சினை தீரும்.

 

3

மிதுனம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றத்தை காணலாம்.

 

kadagam

கடகம்

உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் அடைவீர்கள். 

 

5

சிம்மம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் பொருளாதார நெருக்கடிகளை தவிர்க்கலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. 

 

kannirasi

கன்னி

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்வுகள் நடைபெறும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும். 

 

thulam

துலாம்

இன்று நீங்கள் தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்க குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அயராத உழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நல்லது. 

 

viruchagam

விருச்சிகம்

இன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துகளால் நற்பலன்கள் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிட்டும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். 

 

danush

தனுசு

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் மனமகிழ்ச்சி கூடும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

 

magaram

மகரம்

இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

 

kumbam

கும்பம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் கவனம் தேவை. 

 

meenam

மீனம்

இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். 

 

Next Story

இன்றைய ராசி பலன் - 16.10.2023

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

Today rasipalan -07.09.2023

 

இன்றைய  பஞ்சாங்கம்

16-10-2023, புரட்டாசி 29, திங்கட்கிழமை, துதியை திதி பின்இரவு 01.13 வரை பின்பு வளர்பிறை திரிதியை. சுவாதி நட்சத்திரம் இரவு 07.35 வரை பின்பு விசாகம். அமிர்தயோகம் இரவு 07.35 வரை பின்பு மரணயோகம். சந்திர தரிசனம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 

இன்றைய ராசிபலன் -  16.10.2023

 

mesham

மேஷம்

இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.
 

reshabam

ரிஷபம்

இன்று குடும்ப உறவுகளிடம் நல்ல ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். புதிய கூட்டாளி சேர்க்கையால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.

3

மிதுனம் 

இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் கிட்டும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

kadagam

கடகம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கடன்கள் ஓரளவு குறையும்.
 

5

சிம்மம்

இன்று பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்தோடு ஈடுபடுவார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் பணிசுமை குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.

kannirasi

கன்னி

இன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நெருக்கடிகளால் மன நிம்மதி குறையும். ஆரோக்கிய ரீதியாக எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் அனுகூலம் உண்டாகும்.

thulam

துலாம்

இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு தொழில் நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நினைத்த காரியம் நிறைவேறும்.

viruchagam

விருச்சிகம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் வேலைபளு அதிகரிக்கும். நண்பர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
 

danush

தனுசு

இன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும்..

magaram

மகரம்

இன்று நீங்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கி எதிர்பார்த்த லாபம் கிட்டும். 


kumbam

கும்பம்

இன்று குடும்பத்தில் பெரியவர்களிடம் மாற்று கருத்துக்கள் ஏற்படும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் சாதகமான பலன்கள் உண்டாகும்.

 

meenam

மீனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

 

 

Next Story

இன்றைய ராசி பலன் - 14.10.2023

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

Today rasipalan -07.09.2023

 

இன்றைய  பஞ்சாங்கம்

13-10-2023, புரட்டாசி 26, வெள்ளிக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி இரவு 09.51 வரை பின்பு அமாவாசை. உத்திரம் நட்சத்திரம் பகல் 02.10 வரை பின்பு அஸ்தம். சித்தயோகம் பகல் 02.10 வரை பின்பு அமிர்தயோகம். தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

 

இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00  

 

இன்றைய ராசிபலன் -  14.10.2023

 

mesham

மேஷம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவால் நற்பலன்கள் கிட்டும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.
 

reshabam

ரிஷபம்

இன்று வியாபாரத்தில் பணவரவு சுமாராக இருக்கும். சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். வேலையில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

3

மிதுனம் 

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் உதவியால் பண நெருக்கடிகள் குறையும்.

kadagam

கடகம்

இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட துணிவுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்லது நடக்கும்.
 

5

சிம்மம்

இன்று உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். சுபமுயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும். எதிலும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவது நல்லது.

kannirasi

கன்னி

இன்று குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வருமானம் இரட்டிப்பாகும்.

thulam

துலாம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். எதிர்பார்த்த உதவி ஏமாற்றத்தை தரலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

viruchagam

விருச்சிகம்

இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். சுபசெலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் நற்பலனை தரும்.
 

danush

தனுசு

இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். சேமிப்பு உயரும்.

magaram

மகரம்

இன்று உங்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படலாம். உற்றார் உறவினர்களால் மனசங்டங்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை விலகி முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

kumbam

கும்பம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளில் நிதானம் தேவை. பேச்சை குறைக்கவும்.

 

meenam

மீனம்

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் கூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்