Skip to main content

இன்றைய ராசி பலன் - 21.05.2023

Published on 20/05/2023 | Edited on 21/05/2023

 

today rasipalan -  29.03.2023

 

இன்றைய  பஞ்சாங்கம்

21-05-2023, வைகாசி 07, ஞாயிற்றுக்கிழமை, துதியை  திதி இரவு 10.10 வரை பின்பு வளர்பிறை திரிதியை. ரோகிணி நட்சத்திரம் காலை 09.04 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். சந்திர தரிசனம். கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.  இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.

 

இன்றைய ராசிபலன் -  21.05.2023

 

mesham

மேஷம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகளால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும்.

 

reshabam

ரிஷபம்

இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். 

 

3

மிதுனம் 

இன்று பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

 

kadagam

கடகம்

இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

 

5

சிம்மம்

இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.

 

kannirasi

கன்னி

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். சுபமுயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். நண்பர்களால் மன நிம்மதி குறையும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

 

thulam

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். எதிலும் கவனம் தேவை.

 

viruchagam

விருச்சிகம்

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உடல்நிலை சீராகும்.

 

danush

தனுசு

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

 

magaram

மகரம்

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். சேமிப்பு பெருகும்.

 

kumbam

கும்பம்

இன்று எந்த ஒரு செயலிலும் ஈடுபாடு இல்லாமல் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலம் உண்டாகும்.​

 

meenam

மீனம்

இன்று புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். பிள்ளைகளின் செயல்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.

 

 

 

Next Story

இன்றைய ராசி பலன் - 16.06.2023

Published on 15/06/2023 | Edited on 16/06/2023

 

today rasipalan -  29.03.2023

 

இன்றைய  பஞ்சாங்கம்

16-06-2023, ஆனி 01, வெள்ளிக்கிழமை, திரியோதசி திதி காலை 08.40 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. கிருத்திகை நட்சத்திரம் பகல் 03.07 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் பகல் 03.07 வரை பின்பு மரணயோகம். மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.  இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00- 03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

 

இன்றைய ராசிபலன் -  16.06.2023

 

mesham

மேஷம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். சிக்கனமாக செயல்பட்டால் செலவுகளை சமாளிக்க முடியும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு தீரும்.

 

reshabam

ரிஷபம்

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்களை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

 

3

மிதுனம் 

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படும். பண பற்றாக்குறையால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

 

kadagam

கடகம்

இன்று பெரிய மனிதர்களின் சந்திப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்க்காத முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்.

 

5

சிம்மம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய நட்பு ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

 

kannirasi

கன்னி

இன்று எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர்.​

 

thulam

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது.

 

viruchagam

விருச்சிகம்

இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் தீரும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். 

 

danush

தனுசு

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியான வழக்கு விஷயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

 

magaram

மகரம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வேலையில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

 

kumbam

கும்பம்

இன்று குடும்பத்தில் வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறி சற்று முன்னேற்றம் ஏற்படும். வேலையில் கவனமுடன் இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.​

 

meenam

மீனம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதர சகோதரி வழியில் நன்மைகள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். எதிர்பாராத பணவரவால் ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

 

 

 

Next Story

இன்றைய ராசி பலன் - 15.06.2023

Published on 15/06/2023 | Edited on 15/06/2023

 

today rasipalan -  29.03.2023

 

இன்றைய  பஞ்சாங்கம்

15-06-2023, வைகாசி 32, வியாழக்கிழமை, துவாதசி திதி காலை 08.32 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பரணி நட்சத்திரம் பகல் 02.12 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் பகல் 02.12 வரை பின்பு மரணயோகம். கிருத்திகை - பிரதோஷ விரதம். சிவ-முருக வழிபாடு நல்லது.   இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

இன்றைய ராசிபலன் -  15.06.2023

 

mesham

மேஷம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கொடுத்த கடன் வசூலாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

 

reshabam

ரிஷபம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம். மன நிம்மதி ஏற்படும்.

 

3

மிதுனம் 

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன் இருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள்.​

 

kadagam

கடகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

 

5

சிம்மம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி அடைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

 

kannirasi

கன்னி

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. தூரப் பயணங்களில் கவனம் தேவை.

 

thulam

துலாம்

இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். வெளிக்கடன்கள் இன்று வசூலாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.

 

viruchagam

விருச்சிகம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். 

 

danush

தனுசு

இன்று உங்களுக்கு ஆரோக்கியம் சீராக உணவில் கட்டுப்பாடு தேவை. பிள்ளைகள் வகையில் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் நேரத்தில் கைநழுவி போகும். தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். 

 

magaram

மகரம்

இன்று உங்களுக்கு பணபற்றாக்குறை ஏற்படலாம். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் தேவையில்லாத மனசங்கடங்கள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் லாபம் பெருகும். 

 

kumbam

கும்பம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

 

meenam

மீனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வகையில் பணவிரயங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பாராத இனிய மாற்றங்கள் நிகழும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளால் லாபம் கிட்டும்.