கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய பஞ்சாங்கம்

Advertisment

17-01-2020, தை 03, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி காலை 07.28 வரை பின்பு அஷ்டமிதிதி பின்இரவு 05.33 வரை பின்பு தேய்பிறை நவமி. சித்திரை நட்சத்திரம் பின்இரவு01.12 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2.காணும் பொங்கல். கால பைரவர்க்கு உகந்த நாள். கரிநாள். சுபமுயற்சிகளைதவிர்க்கவும். இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன்காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30.மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

mesham

Advertisment

மேஷம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின்விருப்பங்கள் நிறைவேறும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். நவீன பொருட்கள்வாங்கும் யோகம் உண்டு. தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புஅமையும். சுப செய்தி கிடைக்கும்.

reshabam

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற செலவுகளைகுறைப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும்வியாபாரம் பாதிப்படையாது. உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம்நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.

3

மிதுனம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நண்பர்களுடன் சிறுமனஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் ஓரளவுகுறைந்து சுமூகநிலை உருவாகும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துசெல்வது நல்லது. தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

kadagam

கடகம்

இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள்வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால்வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கிமகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.​

5

சிம்மம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம்.வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால்வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் விலகும். பூர்வீக சொத்துக்களால்

அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.​

kannirasi

கன்னி

இன்று குடும்பத்தில் தாராள பணவரவு இருக்கும். உடன் பிறந்தவர்களால்அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில்மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல்ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

thulam

துலாம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் கருத்துவேறுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதுநல்லது. உங்களின் புதிய முயற்சிகளுக்கு பெரியவர்களின் ஆதரவு கிட்டும்.நண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் குறையும்.​

viruchagam

விருச்சிகம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரக்கூடிய அற்புதமானநாளாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில்ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள்இருக்கும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்.

danush

தனுசு

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நற்செய்தி வரும்.உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். எதிரியாக இருந்தவர்கூட நண்பராக மாறி செயல்படுவார்கள். தொழில் ரீதியான நவீன கருவிகள்வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.

magaram

மகரம்

இன்று வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்கள்தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும்.சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்கள்சாதகமாக இருப்பார்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

kumbam

கும்பம்

இன்று உங்கள் உடல் நிலையில் சிறு பாதிப்பும் மன உளைச்சலும் ஏற்படும்.வேலையில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 01.49 வரைசந்திராஷ்டமம் இருப்பதால் பெரிய தொகையை பிறரை நம்பி கொடுக்காமல்இருப்பது உத்தமம். மதியத்திற்கு பிறகு மன நிம்மதி ஏற்படும்.​

meenam

மீனம்

இன்று குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். எதிர்பாராதவீண் செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 01.49 மணிக்கு மேல்சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. புதியமுயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.