இன்றைய ராசிப்பலன் - 05.11.2019

கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய பஞ்சாங்கம்

05-11-2019, ஐப்பசி 19, செவ்வாய்க்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை நவமி திதி.நாள் முழுவதும் அவிட்டம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் -2. ஜீவன் - 1/2. அக்ஷய நவமி. தனிய நாள். சுபமுயற்சிகளையும் பயணங்களையும்தவிர்க்கவும்.இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன்மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

mesham

மேஷம்

இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள்.நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். திருமணமுயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.

reshabam

ரிஷபம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத பணவரவு உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்த மன சங்கடங்கள் மறையும்.கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம்கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

3

மிதுனம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். எதிலும்நிம்மதியில்லாத நிலை தோன்றும். வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில்கால தாமதமா-கும். உங்கள் ராசிக்கு மாலை 04.47 மணி வரை சந்திராஷ்டமம்இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

kadagam

கடகம்

இன்று உங்களுக்கு மாலை 04.47 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால்எடுக்கும் முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். வீண் செலவுகள் செய்ய நேரிடும்.அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும்.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

5

சிம்மம்

இன்று உங்களுக்கு தாராள பணவரவு உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின்நன்மதிப்பை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் உங்கள் மதிப்பும்மரியாதையும் உயரும். மாணவர்களுக்கு படிப்பில் தங்கள் திறமைகளைவெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை பளு குறையும்.

kannirasi

கன்னி

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலைநீங்கும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள்கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.

thulam

துலாம்

இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில்சிறு சிறு பிரச்சினைகளால் நிம்மதி குறையும். உற்றார் உறவினர்களைஅனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள்குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

viruchagam

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மன கஷ்டங்கள் ஏற்படலாம். செய்யும்செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம்கிடைக்கா விட்டாலும் நஷ்டம் இருக்காது. உறவினர்கள் உதவியால் உங்கள்பிரச்சினைகள் குறையும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

danush

தனுசு

இன்று உங்களுக்கு பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வெளியூர்பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும்.வருமானம் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

magaram

மகரம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள்வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். தேவைகள் பூர்த்தியாகும்.உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும்.வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். வருமானம் பெருகும்.

kumbam

கும்பம்

இன்று உங்களுக்கு உடல் நிலையில் சோர்வு மந்த நிலை ஏற்பட்டு அன்றாடபணிகளை கூட செய்ய முடியாமல் போகும். செலவுகள் சற்று கூடுதலாகஇருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. வியாபார ரீதியாகஎதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

meenam

மீனம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள்ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில்பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும்.பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. எதிர்பாராத உதவிகிட்டும்.

today rasipalan
இதையும் படியுங்கள்
Subscribe