today rasipalan -  29.03.2023

இன்றைய பஞ்சாங்கம்

01-09-2023, ஆவணி 15, வெள்ளிக்கிழமை, துதியை திதி இரவு 11.51 வரை பின்பு தேய்பிறை திரிதியை. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 02.56 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். அம்மன் வழிபாடு நல்லது.இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

Advertisment

இன்றைய ராசிபலன் -01.09.2023

mesham

மேஷம்

இன்று வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

Advertisment

reshabam

ரிஷபம்

இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

3

மிதுனம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வெளியூர் பயணங்களால் அ-னுகூலப்பலன் உண்டாகும்.

Advertisment

kadagam

கடகம்

இன்று உங்கள் ராசிக்கு காலை 09.36 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிம்மதி இல்லாத நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மதியத்திற்கு பிறகு பிரச்சினைகள் குறைந்து மன அமைதி ஏற்படும்.

5

சிம்மம்

இன்று உங்கள் ராசிக்கு காலை 09.36 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடங்கல்கள் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

kannirasi

கன்னி

இன்று அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும்.

thulam

துலாம்

இன்று உங்களுக்கு தாராள தன வரவும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

viruchagam

விருச்சிகம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு பெரியவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். நண்பர்களின் உதவியால் பணகஷ்டம் குறையும்.

danush

தனுசு

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் வியாபாரம் பாதிப்படையாது. உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நெருக்கடிகள் ஓரளவு குறையும்.

magaram

மகரம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்தி வரும். வேலையில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். தொழில் ரீதியான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.

kumbam

கும்பம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத பணவிரயங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலன் கிட்டும்.

meenam

மீனம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் மூலம் சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் கௌரவ பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.