ADVERTISEMENT

இன்றைய ராசி பலன் -30.03.2024

08:01 AM Mar 30, 2024 | kalaimohan

ADVERTISEMENT

இன்றைய பஞ்சாங்கம்

ADVERTISEMENT

30.03.2024, பங்குனி - 17, சனிக்கிழமை, பஞ்சமி திதி இரவு 09.14 வரை பின்பு தேய்பிறை சஷ்டி, அனுஷம் நட்சத்திரம் இரவு 10.03 வரைபின்பு கேட்டை, நாள் முழுவதும் சித்தயோகம்.

இராகு காலம் - காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசி பலன் - 30-03-2024

மேஷம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்


இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். பொன் பொருள் சேரும்.



மிதுனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.


கடகம்

இன்று உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

சிம்மம்


இன்று நீங்கள் எதிலும் கவனமாக இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் உங்கள் கையிருப்பு குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்றே கடின உழைப்பு தேவை. பெரிய மனிதர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை அளிக்கும். புத்திர வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.

கன்னி

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொன் பொருள் சேரும்.

துலாம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. எதிர்பாராத உதவி கிட்டும்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகள் பெருமை படும் படி நடந்து கொள்வார்கள். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு தொழிலின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.

தனுசு

இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.



மகரம்

இன்று எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். குடும்பத்தினருடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். சிலருக்கு வியாபார ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.


கும்பம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும். மன நிம்மதி ஏற்படும்.

மீனம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை குறைக்க முடியும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT