Skip to main content

தினசரி ராசிபலன்- 26.08.2021

Published on 26/08/2021 | Edited on 26/08/2021

மிதுனம்
இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய மாற்றங்கள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

kadagam

கடகம்
இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவர். கடன்கள் குறையும்.

5

சிம்மம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை.

kannirasi

கன்னி
இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்க்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். பெரிய மனிதர்களின் அறிமுகம் மன மகிழ்ச்சியை தரும்.

thulam

துலாம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவையும் பாராட்டுதலையும் பெறுவார்கள். வியாபார ரீதியான பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி ஏற்படும்.

viruchagam

விருச்சிகம்
இன்று பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். புதிய தொழில் தொடங்குவதற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

danush

தனுசு
இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் வீண் பிரச்சினையை தவிர்க்கலாம். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.

magaram

மகரம்
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வரும்.

kumbam

கும்பம்
இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.

meenam

மீனம்
இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். இதுவரை வராத பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும்.