Skip to main content

இன்றைய ராசி பலன்-26.06.2024

Published on 25/06/2024 | Edited on 26/06/2024

 

Today rasi palan - 26.04.2024

இன்றைய  பஞ்சாங்கம்

26-06-2024, ஆனி 12, புதன்கிழமை, பஞ்சமி திதி இரவு 08.55 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. அவிட்டம் நட்சத்திரம் பகல் 01.05 வரை பின்பு சதயம். பிரபலாரிஷ்ட யோகம் பகல் 01.05 வரை பின்பு சித்தயோகம்.  

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00 

இன்றைய ராசி பலன் - 26.06.2024

mesham

மேஷம்

இன்று வீட்டில் சுப நிகழ்வுகள் கைகூடும். வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். குடும்ப தேவைக்கேற்றவாறு வருமானம் பெருகும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்களில் அனுகூலப் பலன் கிட்டும்.
 

reshabam

ரிஷபம்

இன்று எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் ஈட்டுவீர்கள். பொன் பொருள் சேரும்.

3

மிதுனம் 

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடனிருப்பவர்களோடு சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் நிதானம் தேவை. புதிய நுட்பங்களை பயன்படுத்தி தொழிலில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள்.


kadagam

கடகம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதி காப்பது உத்தமம்.
 

5

சிம்மம்

இன்று குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை சேரும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
 

kannirasi

கன்னி

இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் சுமூக உறவு ஏற்படும். பிள்ளைகளால் பெருமை சேரும். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.
 

thulam

துலாம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

viruchagam

விருச்சிகம்

இன்று கடின உழைப்பால் மட்டுமே வேலையில் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினைகள் குறையும்.

danush

தனுசு

இன்று வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உறவினர்கள் மூலம் ஆதாயம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


magaram

மகரம்

இன்று குடும்பத்தினருடன் ஒற்றுமை குறையும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளி மாநிலத்தவர் நட்பு ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
 

kumbam

கும்பம்

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிட்டும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
 

meenam

மீனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமதப்பலனே கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. உடன் பிறந்தவர்களால் சாதகமான பலன்கள் கிட்டும்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

இன்றைய ராசி பலன்-16.07.2024

Published on 15/07/2024 | Edited on 16/07/2024

 

Today rasi palan - 26.04.2024

இன்றைய  பஞ்சாங்கம்

16-07-2024, ஆனி 32, செவ்வாய்க்கிழமை, தசமி திதி இரவு 08.34 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. விசாகம் நட்சத்திரம் பின்இரவு 02.14 வரை பின்பு அனுஷம். மரணயோகம் பின்இரவு 02.14 வரை பின்பு சித்தயோகம். தட்சிணாயான புண்யகால ஆரம்பம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 
 

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இன்றைய ராசி பலன் - 16.07.2024

mesham

மேஷம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.
 

reshabam

ரிஷபம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

3

மிதுனம் 

இன்று உங்களுக்கு பொருளாதார பிரச்சினைகளால் மனஅமைதி குறையலாம். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.


kadagam

கடகம்

இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களிடம் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் சில இடையூறுகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

5

சிம்மம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்ல படியாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வரும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
 

kannirasi

கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும்.
 

thulam

துலாம்

இன்று இல்லத்தில் தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். சுப முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய கடன்கள் தீரும்.
 

viruchagam

விருச்சிகம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பம் தேவையற்ற கவலை உண்டாகும். வியாபாரத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.
 

danush

தனுசு

இன்று குடும்பத்தில் உறவினர் வருகை மகிழ்ச்சியை தரும். புத்திர வழியில் சுபசெலவுகள் ஏற்படும்.  வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

magaram

மகரம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். சுபமுயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்.

kumbam

கும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் எந்த பாதிப்பும் இருக்காது. பெற்றோரின் ஆதரவு நம்பிக்கையை அளிக்கும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.

meenam

மீனம்

இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. சுப முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.

 

Next Story

இன்றைய ராசி பலன்-14.07.2024

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Today rasi palan - 26.04.2024

இன்றைய  பஞ்சாங்கம்

14-07-2024, ஆனி 30, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி மாலை 05.26 வரை பின்பு வளர்பிறை நவமி. சித்திரை நட்சத்திரம் இரவு 10.06 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 

இன்றைய ராசி பலன் - 14.07.2024

mesham

மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகள் நிறைவேறும்.
 

reshabam

ரிஷபம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
 

3

மிதுனம் 

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.



kadagam

கடகம்

இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை, கை கால் அசதி உண்டாகும். புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. சகோதர சகோதரிகள் வழியில் சாதகமான பலன் கிட்டும். சிலருக்கு ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
 

5

சிம்மம்

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
 

kannirasi

கன்னி
இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும் என்றாலும் பேச்சில் நிதானம் தேவை. பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள்.
 

thulam

துலாம்

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.
 

viruchagam

விருச்சிகம்

இன்று எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். கடன்கள் சற்று குறையும்.
 

danush

தனுசு

இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல்நிலை சீராகும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெறும்.



magaram

மகரம்

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.

kumbam

கும்பம்

இன்று உங்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளுடன் வீண் மனஸ்தாபங்கள் தோன்றும். உங்கள் ராசிக்கு காலை 08.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. வியாபார ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
 

meenam

மீனம்

இன்று உங்கள் ராசிக்கு காலை 08.43 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்ய நினைக்கும் காரியங்களில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.